பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌976 திருக்குறட் குமரேச வெண்பா நெறிகேடராய்க் கொடுமை மண்டி கின்ற பகைவரை ஒருமுறை இவ்வீரன் அடக்கச் சென்ருன். இவனுடைய சேஆனகள் எதிரியின் நகரை வ8ளத்துக் கொண்டன. போர் மூண்டால் பலர் மாண்டுபட நேர்வரே என்று இவ் வள்ளல் உள்ளம் இரங்கினன். நல்லவர்கள் சாதுக்கள் அந்தணர்கள் பசுக்கள் பெண்கள் முதலியோரை அய லே வெளியேற்றிப் பாதுகாப்புச் செய்த பின்னரே அம ராற்ற நேர்ந்தான். இவனது அருள் ஆண்மைகளேயும் திே முறைமைகளேயும் அ றி ங் து வியந்து பகைவரும் இவன் அடிவணங்கிப் பணிவுடையராப் இணங்கி கின்ற னர். அந்த நிலைமையை யாவரும் புகழ்ந்து போற்றினர். பாவலரும் உவந்து பாடினர். அவருள் கெட்டிமையார் என்னும் சங்கப் புலவர் பாடியது அயலே வருகிறது. ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை பீரும், பேணித் தென் புலம் வாழ்நர் க்கு அருங்கட ன் இறுக்கும் டொன் போல் புதல்வர்ப் பெருஅ திரும், 5 எம்.அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி; தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த 10 முந்நீர் விழவின் நெடியோன் நன்னிர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம், 9) நீதியும் கருணேயும் நிறைந்த எம்பெருமான் ஆகிய இப் பாண்டிய வேந்தன் ப.:றுளி ஆற்று மணலினும் பல்லாண்டு வாழவேண்டும் என்று புலவர் இவ்வாறு வேண்டியுள்ளார். தண்டம் புரிவதிலும் தண்ணளி' தழுவி வந்த விழுமிய இப் பெரு வழுதி பெருங் திருவும். பெரும் புகழும் பெருகி வர இனிது வாழ்ந்து வந்தான். * . குற்றம் புரிந்தார் பால் கோன்தண்டம் செய்வதுதான் உற்றமக்கட் காற்றும் உறவு. தண்டம் தயவுடன் புரிக.