பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3998 திருக்குறட் குமரேச வெண்பா வளவன் அறிந்தான். தனது இராசதானியிலிருந்து வங் தவன் என்ற தல்ை நல்ல ஒரு புலவனேக் கொல்ல மூண் உானே! என்று உள்ளம் கொதித்து உருத்தெழுந்து படைகளோடு வந்து இவனுடைய நகரை வ. ளே ந் து கொண்டான். அந்தப் பேரரசனே டு நேரே போராட அஞ்சி அரண்மனைக் குள்ளேயே பதுங்கியிருந்தான். பலரும் பழி கூற மறைந்திருந்தவன் முடிவில் வெளியேறி ன்ை. காரியாறு என்னும் இடத்தில் இவன் மாண்டு மடிந்தான். கடுமொழியும் கை இகந்த தண்டமும் உடை. பவன் அடுமுரண் அழிந்து அவலமாய் ஒழிவான் என் பதை உலகம் இவன் பால் தெளிவா உணர்ந்து கின்றது. அடுங்கிள்ளி வளவன் என அறிந்தமையால் அகம்வெருவி நெடுங்கிள்ளி நிலே குலேந்து நீள ர னம் புக்கிருந்தான்; கடுங்கள்ளி முள் எனவே கடுந் துயர்கள் செய்தமையால் படுங்கிளேயோடு அடலழிந்து பழிபடிந்து பட்டொழிந்தான். அல்லல் புரியும் அரசன் அவலமாய் ஒல்லை அழியும் உடைந்து. பொல்லாங்கு புரியாதே. திரு சிறுகும் திறன். 588. என்னே சததன் வா எண்ணுமல் செய்து பின் கொன்னே இழிந்தான் குமரேசா-துன்னும் இனத்தாற்றி எண்ணுத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு. (அ) இ-ள். - - குமரேசா சினந்து தீது செய்த சததன் வா ஏன் இழிந்து அழிந்தான்? எனின், இனத்து ஆற்றி எண்ணுத வேந்தன் சினத்து ஆற்றிச் சீறின் திரு சிறுகும் என்க. செல்வம் சிதைவது தெரிய வந்தது. உற்ற துணைவரோடு உசாவி உணராத அரசன் வெகுண்டு அல்லல் செய்யின் செல்வம் தேய்ந்துபோம். .