பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. க ண் ைேட் ட ம் 30.25 பாடலுக் காகவே பண் பண்ணப்பட்டு உள்ளது: கண்ணுேட்டத்துக் காகவே கண் படைக்கப்பட்டுளது. காட்சியின் அரிய பயனும், கேள்வியின் இனிய சுவை பும் கிழமையாய்த் தெரிய நேர்ந்தன. பண் அமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிது இன்னு. (இன்னு நாற்பது 32) பண்ணும் பாடலும் இதில் கூடி வந்துள்ளன. பண் அமையாத போது பாடல் இனிமையாய் இராது என் பதை இங்கே நன்கு தெரிந்து கொள்கின்ருேம். கண் எனக் குவளையும் கட்டல் ஒம்பினுர்; வண்ண வாள் முகம்என மரையி னுட்புகார்; பண் எழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்; தண்வயல் உழவர்தம் தன்மை இன்னதே. (சீவகசிந்தாமணி) எழுத்து வடிவம் தோன்றப் பண்ணேப் பாடிய உழ. வர்கள் தம் காதலிகளின் கண்ணும் முகமும் போன்று இருந்த குவளே தாமரைகளைப் பறியாமல் கண்னேடி கின்றனர் என்னும் இது ஈண்டு எண்ணி யுணரவுரியது. பாட நேர்ந்தபோது தான் பண் இனிய ஓசை உருவ மாய் உவகை சுரங்து வருகிறது. பண்ணினர் பாடலாகிப் பழத்தினில் இரதம் ஆகிக் கண்ணினர் பார்வை ஆகிக் கருத்தொடு கற்பம் ஆகி எண்ணினர் எண்ணம் ஆகி ஏழுலகு அனைத்தும் ஆகி நண்ணினர் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே. (தேவாரம்) பண்ணும் பாடலும், கண்ணும் கண்ணுேட்டமும், பழமும் இரசமும் எ ன இன்னவாறு பரமேசுவரன் இனிமை சுரங்துள்ளார் என அப்பர் இப்படிப் பாடியிருக் கிருர். அரிய இனிய பொருள்கள் எல்லாம் பரம்பொரு அளின் உருவம் என மேலோர் கருதி வருகின்றனர். அவ் வரவு இங்கே இவ்வாறு இனிது தெரிய வந்தது. 379