பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. க ண் னே ட் ட ம் 3035. பாரி ஏன் அதன் அருகே தேரை நிறுத்திப் போன்ை? எனின், கண்ணிற்கு அணிகலம் கண்ைேட்டம்: அ. து இன்றேல் புண் என்று உணரப்படும் என்க. கண்ணும் புண்ணும் காண வந்தன. கண்ணுக்கு நல்ல அ னி தண்ணளியே அந்த அருள் நீர்மை இல்லையேல் அது புண்ணே. அணிகலம்= ஆபரணம்: பூடணம். மனிதருடைய உடல்களே அணுகியிருந்து அழகு செய்து வருவது அணி என வந்தது. பொன் மணி முதலிய அரிய பொருள்களால் நகைகள் பல வகை களாச் செய்யப்படுகின்றன. பூண் அணி அணிகலம் பூடணம் வள்ளி ஆயிழை கலமும் ஆபர ணம்மே. (பிங்கலந்தை) ஆபரணத்திற்கு இவ்வாறு பேர்கள் வந்துள்ளன. பாவும் காரணக் குறிகளே ப் பூரணமாக வுடையன. ஒரு நூலுக்கு முகவுரை அழகாய்த் தெளிவு செய்து வருதலால் அ.து அணிந்துரை என வந்தது. மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல்-நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. (நன்னூல்) தான் அடுத்ததை அழகுசெய்வது அணி என அமைந்தது. காது மூக்கு கழுத்து கை கால் விரல் இடை தோள் தலை முதலிய உறுப்புக்களுக்கு அ ணரி க ள் சிறப்பா அமைந்துள்ளன. கண்ணுக்கு மாத்திரம் அணியில்லே. யாதோர் அணிகலமும் வேண்டாமலே இயல்பாகவே எழில் ஒளி வீசி எல்லாவற்றிற்கும் மேலான மகிமைக ளோடு அது விளங்கி யுளது. அத்தகைய வித்தகக் கண்ணிற்கு அதிசயமான ஒரு விசித்திர அணிகலனைத் தேவர் இங்கே யாவரும் அறிய அருளியிருக்கிரு.ர். கண்ணிற்கு அணிகலம் கண்னேட்டம்.