பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306.2 திருக்குறட் குமரேச வெண்பா பெய்தல்= இடுதல் சொரிதல். பெய்ய என்பது. பெய என எதுகைக்கு இசைந்து நின்றது. - நஞ்சு பெயக் கண்டும் = விடம் இடப் பார்த்தும். உம்மை அக்காட்சியின் மாட்சியைக் காட்டி நின்றது. சிறந்த பண்பாடுகள் நிறைந்த சீர்மையான நீர் மையே நாகரிகம் ஆம் ஈண்டு அது கண்னேட்டத்தைக் குறித்துக் கருத்தோடு விளங்கி நின்றது. உண்மையான கண்ணுேட்டம் உடையவரைச் சரி யாக அளங்து தெளிந்து கொள்ளவுரிய கருவி இங்கே தெரிய வங்தது. அரிய பரிசோதனேயால் பெரிய நீர் மையை உரிமையோடு அறிந்து கொள்கின்ருேம். உயர்ந்தோரால் தயக்கத் தகாத நாகரிகமும் உலக வழக்கில் உண்டு ஆதலால் அதனே விலக்குதற்கு கயத் தக்க என்று நயமாக விசேடித்து உரைத்தார். ஆடை அணிகளால் தம்மை அலங்கரித்துக்கொண்டு: மேனி மினுக்குடன் வெளிப் பகட்டாய்த் திரிந்து வருவ தையே நாகரிகம் என்று பலர் இக்காலத்தில் நயங்து. வியங்து உவந்து புகழ்ந்து வருகின்றனர். பண்டு உயர்ந்த அருள் கிலேயில் வழங்கி வந்த சொல் இன்று இழிந்த மருள் கிலேயில் இறங்கியுளது. அன்று காகரிகம் குறித்துள்ளதும், இன்று அது குனித் துள்ளதும் கூர்ந்து சிங்திக்க வுரியன. நாகரிகம் என்னும் நயச்சொல் அருள் நலத்தின் பாகமாய் நின்றது பண்டின்று-மோகமிகு காரியங்கட் கெல்லாம் கருத்தாய் எடுத்ததனை வாரி இறைக்கின் ருர் வந்து. (தருமதீபிகை 521) நாகரிகம் என்னும் மொழி பழங்காலத்தில் விளங்கி யிருந்த மேன்மையையும் இக்காலத்தில் வழங்கிவரும் பான்மையையும் இதல்ை அ றி ங் து கொள்கிருேம். மையல் மயக்கங்களே வையக இயக்கங்களாயுள்ளன. நகர வாழ்விலிருந்து நாகரிகம் வந்துளது.