பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 26 திருக்குறட் குமரேச வெண்பா ஈகை முதலிய இனிய செயல்களாலும் நல்ல கு.ை நீர்மைகளாலும் புகழ் விளேங்து வருகிறது. இந்த அரிய புகழைப் பொச்சாப்புடையவன் அடைய முடியாமல் அவமே இழிந்து கழிந்து போகிருன். மறதி சோர்வு மமதை இகழ்ச்சி மனக்களிப்பு என் பன பொச்சாப்பின் உருவங்கள். பொல்லாத இங்தப் பு:அலகள் புகுந்த பொழுது நல்ல கிலேகன் இல்லாமல் போகின்றன. அல்லல்கள் நேர்கின்றன. விழுக்கொடு மறவி புன்மை மறலொடு பொல்லாங்கே கீழ் இழுக்கொடு சோர்வு பொச்சாப்பு இகழ்ச்சியும் மறத்த லின் பேர். நிகண்டு) மறதிக்கு உரிய பெயர்கள் இ தி ல் இங்கனம் வந்துள்ளன. காரணக் குறிப்புகளே க் கருதி உணர்க. இந்த அதிகாரத்துக்கு மறவாமை என்று பேர் வையாமல் பொச்சாவாமை என்று வைத்தது, ஏன்? எனின், பல பொத்தல்களே உய்த்து உணர என்க. செய்ய வுரிய காரியத்தை மறந்து விடுதல், சோர்க் திருத்தல், இறுமாந்து இழிதல், இகழ்ச்சியாய் ஒழிதல். எண்னது கழிதல் முதலிய பிழைகள் பொச்சாப்பின் விளைவுகளாம். கொச்சையான இதனே யுடையவன் உச்சமான எதையும் அடையான். புகழ்மை = புகழுடைமை. மை விகுதி தன்மைப் பொருளையும் உடைமைப் பொருளேயும் உணர்த்திவரும். ஈண்டு உடைமைமேல் ஊன்றி நின்றது. அது என்றது புகழ் இல்லை என்னும் அங்த உண் மையை. உடலுக்கு அணிபோல் உயிர்க்குப் புகழ். எல்லா அழகுகளேயும் நல்கி எங்கும் மதிப்பும் மாண்பும் அருளி வருதலால் புகழ் உடைமை என வந்தது. கல்வி செல்வம் முதலிய வேறு உடைமைகனினும் புகழுடைமை உயர்நலம் உடையது. வியனை மேன்மை தருவது; உயிர்க்கு ஒளி புரிந்து வருவது.