பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3090 திருக்குறட் குமரேச வெண்பா ஒற்றன் உரம். 585. உற்ற வுருவோ டுகாதேன் சுகசாரர் கொற்றமுற்று நின்ருர் குமரேசா-முற்றும் கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகா அமை வல்லதே ஒற்று. (டு) ( இ-ள்) குமரேசா! சுகன் சாரன் என்னும் ஒற்றர் ஐயுருதி உருவுடன் ஏன்? சென்ருர் எனின், கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று என் க. ஒற்றர் இயல்புகள் உணர வந்தன. யாரும் ஐயுரு த உருவுடன் யாண்டும் அஞ்சாமல் யாதும் உரையாமல் கின்று அறிய வல்லவனே ஒற்றன். வல்லதே, ஒற்று என்றதில் ஏகாரம் தேற்றமாய் வலியுறுத்தி கின்றது. இத்தகைய தன்மைகளும் வின்மை களும் இல்லாதவன் ஒற்றன் ஆதற்கு உரியன் அல்லன். கடாஅ உருவு = சங்தேகம் உருத வடிவம். கடுத்தல் என்பதன் அடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர் எச்சம் கடா என நின்றது. கடுத்தல் = ஐயம் அனுமானமும் சங்கையும் சந்தேகம் ஆகும் ஐயுறல் கடுத்தலும் அப்பெயர்க் குரித்தே. (பிங்கலந்தை) கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம். (நிகண்டு) கடுத்தலின் பொருள்களே இவை விளக்கியுள்ளன. கடா எனவும், உகாமை எனவும் கின்ருல் வெண் பாத் த8ள பிழையாம்: செய்யுள் ஒசையும் சிதையும் ஆதலால் அந்த வழுக்கள் நேராதபடி அளபெடைகள் இனமாய் அமைந்தன . கடாஅ உருவொடு என்னும் இது பழங்காலத்து கடை: அடாஅ அடுப்பு, படாஅ பறை என்பன போலப் பெரும்பாலும் பயின்று வருவதில்லை.