பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3092 திருக்குறட் குமரேச வெண்பா அஞ்சாமை அகத்தே மனத்தைச் சார்ந்தது. உகாமை வாக்கின் வழியது. வாக்கும் மனமும் காயமும் ஒற் றனுக்கு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை இங்கே நன்கு உய்த்து உணர்ந்து கொள்கின்ருேம். அரிய மருமங்களே மருமமாய் அறிந்து வங்து உரிய அரசனிடம் உறுதியாய் உரைத்து வருபவர் ஒற்றர் ஆதலால் அவருடைய உரைகள் யாண்டும் உற்ற துணை யாய் வெற்றிகளே விளேத்து வருகின்றன. நாவலம் தண் பொழில் நண் ணுர் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; அம்பனி யானே வேந்தர் ஒற்றே தம்செவிப் படுக்கும் தகைமைய. (சிலப்பதிகாரம்: 25) வேந்தர் செவியுள் விளங்க உரைத்து எவ்வழியும் வெற்றித் திறல்களேச் செவ்வையாக விளேத்து வருபவர் ஒற்றரே என இது விளக்கியுளது. ஒற்றரின் ஆற்றலும் உபகார நிலைகளும் ஈண்டு உய்த்து உணர உற்றன. எவரும் ஐயுருதபடி யாண்டும் புகுந்து எதையும் கூர்ந்து ஒர்ந்து தெளிந்து வருபவரே தேர்ந்த ஒற்றர். இது சுக சாரணர் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இந்த இருவரும் இலங்கை வேங்தனுடைய ஒற்றர் கள். அதிசய ஆற்றல்கள் உடையவர். கலங்கா நெஞ்சி னர்; காம ரூபிகள் . கருதிய இடத்தில் கருதியபடியே உருவங்களே மருவி மருமங்களே அறிய வல்லவர். இராமபிரான் படைகளோடு கடல்கடந்து வந்து இலங்: காபுரியின் வடபால் பாசறை அமைத்திருந்தான். போர் மேல் மூண்டு வந்துள்ள அந்தச் சேனேகளின் கிலேமை தலைமைகளே அறிந்து வரும்படி இந்த ஒற்றர் இருவரை யும் இராவணன் உய்த்தான். விரகுடன் இவர் விரைந்து சென் ருர். குரங்குகள் போலவே வடிவம் கொண்டார்.