பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3095 சுகன் சாரணன் என்னும் பேருடைய ஒற்றச் இருவர் இலங்கை வேந்தனிடமிருந்து வானா சேனேயுள் புகுந்து யாரும் ஐயுரு தவாறு உளவுகள் அறிந்ததும். அவரது களவு நிலையை வீடணன் அறிந்து அவரைப் பற்றி எற்றியதும், இராமனும் அவரது மாய வஞ்சத் தை அறியாமல் மறுகி நின்றதும், பிறவும் இவற்ருல் அறிந்து கொள் கிருேம். கவிகளின் சுவைகளேக் கவனி யுங்கள். ஒற்றர்கள் எத்தகைய திறலினர்! எத்துணே நிலையினர்! எவ்வளவு சாதுரிய சாகசங்களுடையவர்: என்பதை இங்கே உய்த்து உணர்ந்து கொள்ளலாம். அறிய அரிய உருவோ டனுகி உறுவ துணர்வதே ஒற்று. உளவறி வார் உளமறிவார். ஆயும் திறம். 586. அன்றேன் பருணன் அனுமன் மறைந்தாய்ந்து குன்ருமல் சென்ருர் குமரேசா-நின்று துறந்தார் படிவத்த ரா.கி யிறந்தாராய்ந் தென் செயினும் சோர்விலது ஒற்று. (சு) இ-ள். குமரேசா : பருனு தன் அனுமான் எங்கும் கசக்து புகுந்து ஏன் ஆராய்ந்தார்? எனின், துறந்தார் படிவத் தார் ஆகி இறந்து ஆராய்ந்து என் செயினும் சோர் விலது ஒற்று என்க. சாரர் தன்மை சோர்வின்மை என்கின்றது. துறவிகள் தவசிகள் போல் வேடம் பூண்டு யாண் டும் புகுந்து ஆராய்ந்து யாது செய்யினும் அயராதவரே உயர்வான ஒற்றர். பிறர் ஐயுருத உருவோடு ஒற்றன் செல்ல வேண் டும் என்று முன்னம் உரைத்தார்; அந்த உருவ இனங்க ளுள் சில இங்கே தெரிய விளக்கினர்.