பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зо96 திருக்குறட் குமரேச வெண்பா துறந்தார் என்றது உலக இச்சைகளே முற்றும் துறந்த மேலோரை. பற்று அற்றவர் ஆதலால் யாவரும் இவரை மதித்து மகிழ்ந்து துதித்து வருவர். படிவத்தர் = தவ ஒழுக்கம் உடையவர். உள்ளம் துர யராய் ஆன்ம அனுபவத்தில் படிபவர் அருங்தவராய் உயர்ந்து திகழ்வர் ஆதலால் படிமை யோர் படிவத்தர் என அவர் பாராட்ட கின்ருர். இறந்து = வரம்பு கடந்து. எவரும் எளிதில் புகமுடியாத அரிய இடங்களி லெல்லாம் உறுதியுடன் புகுந்து அங்கு உள்ள நிலைகளே உற்று நோக்கி உய்த்து உணர்ந்து நேரே ஆராய்ந்து வருவது ஒற்றரின் கடமையாம். ஆகவே அவர்க்கு வேண்டிய வேட வடிவங்களும் வினைத்திறங்களும் இவ் வாறு உரிமையோடு தெரிய வங்தன. தவ ஒழுக்கம் இல்லார் தவவேடத்தை மேற்கொள் எல் அவமேயாகும்; அதனே ஒற்றர் உரிமையாக் கொள் வது குற்றம் ஆகாதோ? எனின், செங்கோல் மன்னர் க் குக் கண்போல் நின்று உண்மை கானும் கருத்துடன் ஆட்சிக்கு உறுதியுறச் சேறலின் அவர்க்கு அது குற்றம் ஆகாது: உற்ற ஒரு குணமே யாம் என்க. துறவர் தவத்தர் போல் ஒற்றர் உருக்கொள்வது அவருடைய காரிய சித்திகளைக் கருதிக் கைகொண்ட விரியமான கருமச் சூழ்ச்சிகளாய் விளேங்துள்ளது. நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை விளேங்து வர அரசன் ஆட்சி புரிகிருன் : அந்த ஆட்சிக்குக் காட்சியாய் கின்று மாட்சி புரிந்து வருவது ஒற்றரது உறுதியான உழைப்பே ஆதலால் அவருடைய தொழில் முறை களுக்கு வழிதுறைகள் இங்கே தெரிய வங்தன. அரிய உருவை மருவி எதையும் ஒற்றர் துருவி அறிவர். அவர் செயல்கள் அதிசய மருமங்களுடையன.