பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3-102 திருக்குறட் குமரேச வெண்பா போல் ஒரு மாய வடிவம் அமைத் தான். அந்த மாயச் சீதையை அனுமான் கண் காண வெட்டி வீழ்த்திவிட்டுத் திருவயோத்திக்குப் போர்மேல் போவதாகத் தேர்மேல் ஏறிப் பாவனே காட்டி நிகும்பலேயில் மாரண வேள்வி செய்யப் போனன். அதி மதிமானை அனுமானும் அதனே மெய்யே என்று நெஞ்சம் பதைத்து விரைந்து இராமனிடம் கூறினன். அந்த வீர வள்ளல் உள்ளம் கலங்கி உருகி மறுகினன். யாவரும் அழுது புலம்பினர். எதிரி அயோத்திக்குப் போயிருத்தலால் அங்கே விரைந்து போக வேண்டும் என்று இராமன் மூண்டெ முங் தான். அப்பொழுது வீடணன் விநயமாயுரைத்தான்: *அரசர் பெரும! இது ஒரு மாயச் சூது என்றே கருதுகி றேன்; கற்புத் தெய்வத்தை அவன் கொன் றிருந்தால் இதற்குள் உலகம் யாவும் நிலைகுலைந்து பாழாயழிந்து போயிருக்கும்; அந்தப் பாதகன் செய்துள்ள வஞ்சச் சூழ்ச்சி என்றே என் நெஞ்சம் கருதுகிறது; விரைந்து போய் அம்மையை நேரே கண்டு உண்மையை உணர்ந்து வருகிறேன்' என்று உறுதி கூறி கிறுத்திவிட்டு வண்டு உருவம் கொண்டு மறைந்து போய் யாவும் கண்டு கள் ளன் செய்துள்ள கபட நாடகங்களே எல்லாம் தெள்ளத் தெளிந்து மீண்டு வந்து வள்ளலிடம் கூறவே எல்லாரும் உள்ளம் உவந்து துள்ளி ஆர்த்தனர். வீடணன் உரைத்தது. பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்த போது முத்திறத்து உலகும் வெந்து சாம்பாாய் முடியு மன்றே? அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போன தன்மை சித்திரம் இதனை எல்லாம் தெரிகலாம் சிறிது போழ்தின். (1) விரைந்து சென்றது.' இமையிடை யாக யான்சென்று ஏந்திழை இருக்கை எய்தி அமைவுற நோக்கி உற்றது அறிந்துவந்து அறைந்தபின்னர்ச் சமைவது செய்வது என்று வீடணன் விளம்பத் தக்கது அமைவது என்று இராமன் சொன்னன் அந்த த்து அவனும் (சென் ருன். (2)