பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3 103 மறைந்து கண்டது. வேள் விக்கு வேண் டற் பால கலப்பையும் விறகும் நெய்யும் வாழ்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கங்கண்டான் சூழ்வித்த வண்ணம் ஈதோ! நன்றெனத்துணிவு கொண்டான் தாழ்வித்த முடியான் வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான். (இராமா: மாயாசிதை). நடந்துள்ள நிகழ்ச்சிகளே இவை வரைந்து காட்டி யுள்ளன. காட்சிகளேக் கருதியுணர்பவர் விபீடணனு டைய மதி மாட்சிகளேயும் ஒற்று அறியும் திறனேயும் வியந்து மகிழ்ந்து கொள்வர். மறைந்து சென்று மருமங் களே அறிந்து ஐயம் அறத் தெளிந்து வந்து சொல் பவனே உண்மையான உயர்ந்த ஒற்றன் என்பதிை யாவரும் இவனிடம் அறிந்து மகிழ்ந்தனர். மாற்ருர் மருமங்கள் மாருமல் தேறிவரும் ஆற்றலே ஒற்றர்க் கணி. தேறிவங்து தேற்றி யருள். ஒற்றில்ை ஒற்றல். 588. தாதியைஏன் ஒற்ருத் தமயந்தி மற்றுமுய்த்தாள் கோதில் நளன்பால் குமரேசா-காதலால் ஒற்ருெற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினுல் ஒற்றிக் கொளல். (அ) இ-ள். - குமரேசா : ஒற்றரால் ஒற்றி உணர்ந்த பின்பும் தமயந்தி மீண்டும் ஏன் ஒர் ஒற்றை உய்த்தாள்? எனின். ஒற்று ஒற்றித் தந்த பொருளேயும் மற்றும் ஒர் ஒற்றி ல்ை ஒற்றிக் கொளல் என்க. ஒற்றன் உண்மையை முற்றும் தெளிக என்கிறது. ஒர் ஒற்றன் அறிந்து வந்து அறிவித்த காரியத்தை யும் பின்னும் ஒர் ஒற்றில்ை ஒற்றித் தெளிந்து கொள்க. பொருள் என்றது மருமமான கருமங்களே.