பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 104 திருக்குறட் குமரேச வெண்பா அரிய செய்திகளே அறிந்து கொள்வது அரசனுக் குப் பெரிய செல்வம் ஆதலால் அங்த உண்மையை துண்மையா உணர்ந்து கொள்ளப் பொருள் என்ருர். ஒற்றி உணர்ந்த பொருள் வேந்தனுக்கு வெற்றியை விளேத்து வருகிறது. கொளல்=கொள்ளுக. அல் ஈற்று வியங்கோள் ஈங்கு உடன்பாட்டில் விதிமுறையில் வந்துளது. உற்ற ஒற்றனது உண்மையையும் ஒற்றி அறிந்து கொள்ளும்படி அரசனுக்கு உறுதியா உணர்த்தி யிருக் கிரு.ர். மாற்ருரோடு மருவியோ, வேறு வகையில் மன நிலை திரிந்தோ ஒர் ஒற்றன் தன் கிலே மாறவும் கூடும் ஆத லால் அவன் சொல்லே முற்றும் நம்பி அரசன் காரியத் தில் இறங்கக் கூடாது. பின்னரும் உண்மையான ஒரு வேவுகார சீன விடுத்து முன்னவன் சொன்னது சரியா? என்று திர விசாரித்துத் தெளிந்து கொள்ள வேண்டும். ஒற்றரைத் துரண் டி அன்னேர் உறுவலி உணர்வர் ஏ னும் மற்றும் ஒர் ஒற்றின் அல்லால் அன்னது மன த்துட் கொள்ளார் கற்றுறும் அனிகம் அன்றி ஒருபுடை து ைன் றிச் குழும் பெற்றியும் உளதே என்ன வேய் ஒரீஇத் தேர் வர் பின் னும். (கந்த புரானம்) எதிரிகளுடைய நிலைமைகளே ஒற்றரால் அரசர் ஆராய்ந்து தெளிந்து கொள்ளும் திறங்களே இது வரைந்து காட்டியுள்ளது. ஒற்றை மற்றும் ஓர் ஒற்ருல் ஒற்றித் தெளிக எனத் தேவர் குறித்துள்ளதை இது மேவி வந்துள்ளது. அரசியல் துறைகளுக்கு அடிகள் முறை வகுத்துள் னதைக் காவியக் கவிகள் யாவரும் ஆவலோடு எடுத்து உமடுத்துத் தம் கவிகளே சுவைப்படுத்தி யிருக்கின்றனர். வான ர சேனேகளே அணிவகுத்து நிறுத்தி இராமன் போருக்கு மூண்டு கிற்கும் நிலைகளே ஒற்றரால் இராவ ரைன் முதலில் உசாவி அறிந்தான். பின்னரும் அதிசய