பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 || 1 & திருக்குறட் குமரேச வெண்பா இல்லார் உடையரோ? என்ற சொல்லாடலில் உல் லாசமான எள்ளல் குறிப்பு இசைந்துள்ளது. ஓகார விை உடையர் அல்லர் என உறுதியாய் வலியுறுத் திகின்றது. பொருள்களே உடையவரையே உடையர் என உல கம் கருதி வருகிறது; அந்தக் கருத்தை மாற்றி ஒரு திருத்தத்தை இங்கே தெரிவித்திருக்கிரு.ர். திருந்தி வங் துள்ளது தெளிந்து தேறி விழைந்து கொள நின்றது. உடையர் என்று உயர்ந்தோரால் உண்மையாகச் சொல்லத் தக்கவர் ஊக்கம் உள்ளவரே. பொருளுடை யாரை அவ்வாறு கூறுவது மருளுடைமையே. உபசார வழக்கில் அபசாரங்கள் புகுந்து விடுகின்றன. புறத்தே செல்வங்கள் இலராயினும் அகத்தே ஊக்கம் ஒன்று உடையராயின் அவரே உடையார் என்னும் உயர் பெயர் க்கு உரியராவார். உள்ளே அ.து இல்லாதவர் வெளியே எவ்வளவு பொருள்களே எவ்வகையில் எய்தி யிருந்தாலும் அவர் உடையர் ஆகார். உடைமைகள் என்று சொல்லப் படுகின்ற எல்லாப் பொருள்களே யும் ஒருங்கே மனிதன் அடைதற்கு ஊக்கமே காரணமாயுள்ளது; ஆகவே அதனே உரிமையாக உடை பவரே உடையர் எனும் பெருமைக்குத் தகுதியாகின் ருர். உடைமை எனப்படுவது ஊக்கம் என இவ்வாறு மணக்குடவர் வேறு பாடம் கொண்டுள்ளார். - ஊக்கமும் பொருளும் இவற்றை முறையே உடைய வரும் ஈங்கு நிறை துரக்கி நன்கு நோக்க கின்றனர். பொருள் கோழைகளிடமும், அறிவிலிகளிடமும், கூடி விடுகிறது: ஊக்கம் எவ்வழியும் வீரரிடமே விளங்கி பாண்டும் ஆக்கங்களே ஆக்கி வருகின்றது. இந்த வேறு பாடுகளே வியந்து விழைந்துதுழைந்துநோக்கவேண்டும். அருவிலே மாண்கலனும் ஆன்ற பொருளும் திருவுடையர் ஆயின் திரிந்தும் வருமால்: பெருவரை நாட! பிரிவின் றதல்ை திருவினும் திட்பம் பெறும். (பழமொழி 136)