பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 40 திருக்குறட் குமரேச வெண்பா புலன்கள் அடக் கியதவத்தில் வேள்வி தம்மில் பொருவில் சந்நி யாசத்தில் பொலிந்தது என்ன? துலங்கஉரைத் திடுதிர் எனப் பலன் வெஃ காது நோற்றிடுதல் அருமறையின் துணிவாம் என்ன: உலங்கெழுதோள் மைந்தனுக்கு மவுலி சூட்டி உறுதவத்தின் தலே நின் ருன் உரவுத் தோளான். ஆங்கவன்நல் தவம் நோக்கி மலரோன் எய்தி ஆயுள் ஒரு நூறு அளித்தான்; அமலன் அன்னுேன் ஒங்குதவம் தனை நோக்கி வியந்து பின்னும் ஆயுள் ஒரு நூறளித்தான்; ஒளிசெய் பூணுன், பூங் கமல முகையவிழ்க்கும் கடவுட் போற்றிப் பொருவறுக யத்திரியைப் புகன்று வெய்ய தீங்கதிர்ம ண் டலத்திருக்கும் எண் தோள் முக்கண் தேவின் மலர் அடிநீழல் சேர்ந்தா னன்றே. (2) (கூர்ம புராணம்) உயர்வையே உள்ளி இ வ ன் உயர்ந்துள்ளதை இவற்ருல் உணர்ந்து தெளிந்து கொள்ளுகிருேம். தேர்ங் துள்ள கிலேகளேயும், கிலேயான உயர்வுகளேயும் இங்கே கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். ஊக்கத் தோடு உள்ளம் உயர்ந்து வரின் அந்த மனிதன் ஆக்கத் தோடு சிறந்து திகழ்வன் என்பது தெரிய நின்றது.

  • - திரிசங்கு. சூரிய குலக் குரிசிலாகிய திரிசங்கு மன்னன் அதி சய மதிமான். தன் உள் ளத்தின் உறுதியால் எல்லா மேன்மைகளேயும் எய்தி உயர்ந்தவன். மருவி யுள்ள மானிட வடிவுடன் வானுலக வாழ்வை அடையக் கருதி அயராது முயன்று இறுதியில் வந்து கோசிகன் மூலம் தேசுடன் அந்த உயர் பதவியை அடைந்து ஒளி மிகுந்து கின் ருன். இவனது அரிய உறுதி கிலேயை அமரர் முதல் அனைவரும் வியந்து புகழ்ந்தனர். -

அந்நாளில் எனைத்திரி சங்கு அருகுற்று அங்கத்தொடு விண்புகல் வேண்டும் எனச் சொன்னன் முடியாதுள்ன யான்மொழியத் துறவோர் பிறரால் உறுவேன் எனலும்