பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.142 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளல் மற்று அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து என் பதை வையகமும் வானகமும் அறிய இம்மான விரன் நேரே உணர்த்தி தின் ருன். அரிய கிலையை அடைய முயல்க உரியவுயர் வெல்லாம் உறும். உயர்வே கருதி உய்க. さ37. உரவோர் ஒல்கார். வென்றியுயர் உக்கிரமன் விக்கிரமன் வெவ்விடரில் குன்ருதேன் நின்ருர் குமரேசா-ஒன்றும் சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டுன்றும் களிறு. (எ) இ-ள் குமரேசா.: உக்கிரகுமாரனும் விக்கிரமனும் இடை ஆறுகளில் ஏன் தளராமல் ஊக்கி நின் ருர்? எ னி ன், களிறு புதை அம்பில் பட்டுப் பாடு ஊன்றும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் என்க. அயரா ஆண்மை அறிய வங்தது. யானே தன்மேல் அம்புகள் பாய்ந்தாலும் அயராது செல்லும்: அதுபோல் மான வீரர் அல்லலுறினும் உள். வசம் கலங்காமல் ஊக்கி முயல்வர். சிதைவு=கேடு; அழிவு. ஒல்கார் = குன்ருர்; தளரார். உரவோர் = மனவுறுதி யுடையவர். புதை = அம்புகளின் கட்டு. பாடு=பெருமை: திண்மை. ஊன்றும் = நிலைத்து கிற்கும். * களிறு என்றது ஆண் யானேயை. களிறு ஊன்றும்; உரவோர் ஒல்கார் என்க. எடுத்துக்காட்டு உவமையும் உவமேயமும் இவ் வன்று மடுத்து அடுத்து மாண்புற வங்துள்ளன.