பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.2832 திருக்குறட் குமரேச வெண்பா அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு பொச் சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை என்க. உள்ளத்தில் பயம் உள்ளவர்க்கு வெளியே யாதும் பாதுகாப்பு இல்லை; அதுபோல் மறதி யுடையவர்க்கு. யாண்டும் நன்மை யில்லை. உவமைக் குறிப்பு உய்த்துணர வுற்றது. அச்சமும் பொச்சாப்பும் உறவாய் ஈண்டு அறிய வந்தன. இந்த இரண்டும் குற்றம் உடையன. அச்சம். மனிதனைப் பேடி யாக்கிப் பிழை மிகச் செய்யும்; பொச் சாப்பு மடைய க்ைகிப் பழியிடை வீழ்த்தும்; மதிப்பு மாண்புகளேக் கெடுக்கின்ற மதிகேடுகளே ஒழித்து ஒழுகு. வோரே உயர்ந்தோராய் ஒளிமிகுந்து வருகின்ருர். அரண் = பாதுகாப்பான நிலை. ம தி ல் அகழ், கோட்டை முதலியன தம்மை அடுத்தவர்க்கு ஆதரவாய் கின்று உறுதி தருமாயினும் உள்ளத்தே அச்சம் உடைய வனுக்கு இவை பயன்படா. கூரிய வடிவாளே ஆயினும் பேடி கையில் அது பிழைபடும்; சீரிய அரணும் அச்ச முள்ள கோழைக்கு ஆதரவாகாது. பயந்தவனேப் பயந்தவளும் பழித்து இகழுவாள். செல்வம் கல்வி முதலிய நன்மைகள் பல நன்கு. அமைந்திருந்தாலும் மைய லான மறவியுடையவர்க்கு. அவை நலமாய்ப் பயன்படா. களிப்பாளர் இளிப்பாள சாய் எவ்வழியும் இழிவுறுகின்றனர். அச்சமும் பொச்சாப்பும் அகத்தே மருவியுள்ளவர்க் குப் புறத்தே எவ்வளவு நன்மைகள் பெருகியிருந்தாலும். அவ்வளவும் புன்மையாம். புல்லிய இந்தப் புலேகள் நீங்கிய அளவே நல்ல தலைமைகள் ஓங்கி விளங்கும். அச்சம் = இழிவு. பொச்சாப்பு=புலே. அஞ்சாமை அ ர ச ர் க் கு அடலாண்மையாய்: யாண்டும் அதிசய மேன்மைகளே விளேத்து வரும். பொச்சாவாமை அறிவாண்மையாய்ப் பெருமை அருளும்.