பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க் கம் உ ைட ைம 3 # 63 கஅளயும் அறிந்தான். தனது அரசனே வஞ்சித்து அர சைக் கவர்ந்து கொண்டு பாடலிபுரத்திலிருந்து அரசு புரிந்து வருகிற நவநங்தனைத் தொலைத்தற்கு இவனே நல்ல துனே என்று உள்ளம் துணிந்து இவனே உடன் அழைத்துச் சென்ருன். எதிரியின் நிலைமைகளே மதி தெளிய விளக்கினன். பழைய அரசனது கிழமை வள மைகளே உணர்த்தினன். காரியங்களேக் கூரிய நோக் குடன் ஆராய்ந்த இவன் பகைவனே அதிவிரைவில் தொலைத்தான். முன்னேய மன்னன் மகன் ஆகிய சந்திர குப்தனுக்கு முடிசூட்டி ஆட்சியை மாட்சிபெற கடத்தி ஞன். இவனைக் குருவாகவும் மந்திரியாகவும் கொண்டு அவ்வேந்தன் விழைந்து போற்றி வந்தான். அரசியல் முறைகளைக் குறித்து வடமொழியில் ஒரு பெரிய நூலே இவன் இயற்றியிருக்கிருன். சாணக்கிய நீதி என்று அங் நூல் இவன் பெயரால் விளங்கி வருகிறது. தன் உள் ளத்தின் ஊக்கமே துணையாக வேந்தர்களும் வியந்து போற்றும்படி மேலான மேன்மையை இவன் அடைந்தி ருக்கிருன். இளமையில் இவைேடு பழகியிருந்தவர் எல்லாரும் உரம் இல்லாமையால் ஒரு பேரும் இல்லா மல் ஒரு வகையும் தெரியாமல் மறைந்தே போயிர்ை. இவன் உரத்தால் உயர்ந்து விளங்கின்ை. உரம் ஒருவ னுக்கு உள்ள வெறுக்கை: அ.து இல்லார் மரங்களே என்பதை இவன் வரலாறு திரமாய் விளக்கி யுளது. மந்திர மதியினில் பட்டி வல்லவன்; சிந்தனைச் சூழ்ச்சியில் யூகி தேர்ந்தவன்; தந்திர யுத்தியில் சாணக்கன் எனும் வெந்திறல் வேதியன் வெற்றி கண்டனன். இராச தந்திரிகளுள் இந்தவாறு இசை பெற்றுத் திசை மெச்சிவர உரமாய் இவன் வாழ்ந்து வந்துள்ளான். உள்ளத்துள் ஊக்கம் உயர்திரு: உற்றிலனேல் எள்ளப் படுவன் இழிந்து. உள்ளி உயர்க. _தங்_.