பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 19 3 இவை சோம்பலைக் குறித்து வந்துள்ளன. இந்தப் பத்துப் பெயர்களும் காரணக் குறிகள் பூரணமாப் பொதிந்துள்ளன. ஒர்ந்து உணர்ந்து கொள்க மாய்ந்து மடிந்தவர் எனவே மடியர் வாய்ந்திருத்த லால் அவர் உயிருடன் இருந்தாலும் துயருடைய சவமே. விடக்குறு சடம்பல வேலை செய்தற்கா நடக்கவும் ஒடவும் நனி உறுப்புகள் மடக்கவம் நீட் டவும் வாய்ந்த த ல்சும்மா கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடுளார்களே. (நீதி நூல்) மனிதனுடைய உடலில் அமைந்துள்ள கை கால் முதலிய அவயவங்கள் தொழில் செய்தற்காகவே தோன்றியுள்ளன. அவ்வாறு செய்யாமல் சோம்பரிடம் அவை தேம்பி இருத்தலால் உயிர் அற்றனவாய்த் துய ருற்றே கிடக்கின்றன. -- --- பெருந்திரு அடையினும் மடியர் பயன் அடையார். இது, அசமஞ்சன் இடமும், சத்திரபந்து பாலும் அறிய கின்றது. இவர் சரிதங்கள் பரிதாபங்களாம். ச ரி த ம் . அசமஞ்சன் என்பவன் சூரிய குலத்து அரசர் மரபில் பிறந்தவன். சகர சக்கரவர்த்தியினுடைய புதல்வன். தாப் பெயர் சுகேசினி. இவன் பருவம் எய்தியும் ஒரு தொழிலும் செய்யாமல் வறிதே சோம்பி யிருந்தான். பெற்ருேர் இவனுக்கு இட்டபெயர் போசனன் என்பதே. மடி மண்டி அசமந்தமா யிருந்தமையால் அசமஞ்சன் என நேர்ந்தான். தலை மகனான இவனது நிலைமையை கினேந்து அரசன் மிகவும் வருங்தினன். அறிஞர்களும் அமைச்சர்களும், பெரியோர்களும் எவ்வளவோ புத்தி மதிகளே ப் போதித்தும் இவன் யாதும் கேளாமல் மந்த மாயிருந்தான். சோம்பேறியா யிருந்ததோடு அமை . யாமல் பலவகையான தீம்புகளேயும் செய்ய நேர்ந்தான். வேங்தன் வெறுத்தான்; நாட்டில் யாண்டும் இருக்கக் கூடாது என்று கடிந்து கடுத்துக் காட்டுக்கு ஒட்டின்ை. 400 --