பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 194 திருக்குறட் குமரேச வெண்பா மடிபடிந்த அசமஞ்சன் மன்னர்தம் குடிபடிந்தும் கொடும்பழி கொண்டனன்; இடிபடிந்.ெ தங்கும் எள்ளி இகழ்ந்திடச் செடிபடிந்தவெங் கானிடைச் சென்றனன். சோம்பலால் இவன் இழிந்து ஒழிந்த கிலேயை வையம் இவ்வாறு வைது வருந்தியது. தாய் விதர்ப்பம் தேசத்து அரசனுடைய அருமைத் திருமகள். தங்தை பெரிய சக்கரவர்த்தி. அரிய .ெ ப ரி ய செல்வங்கள் நிறைந்திருந்தும் மடி புகுந்தமையால் இவன் மாண் பிழந்து ஒழிந்தான். படியுடையார் பற்று அமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தார் என்பதை உலகம் காண இவன் கிலேயாய் உணர்த்தி கின்ருன். சத்திர பங்து. இவன் விசுவரதன் என்னும் வேங்தன் புதல்வன். அரசர் குடியில் பிறந்திருந்தும் அரசுக்கு உரிய முறை சிறிதும் அறியாமல் அவல நிலைகளில் இழிந்து திரிக் தான். வேறு முயற்சிகள் யாதும் கருதாமல் அயித் சுவைகளிலும் துயிற் சுவைகளிலும் தோய்ந்து கிடக் தான். குடிகேட்டிற்கு ஏதுவான மடியினேயே மேற். கொண்டு மதியிழந்து உழந்த இவனுக்கு அறிஞர் சிலர் மதிநலன்களே அதிநயமாக மொழிந்தனர். மொழிந்தும் யாதும் கேளாமல் தீதே புரிந்து வந்தான். வான் வேல் முதலிய கொலேக் கருவிகளுக்குச் சத்திரம் என்று பெயர். அவற்றைக் கைக்கொண்டு குடிகளுக்கு அல்லல் புரிந்து வந்தமையால் பெயர்க்கு உரிய காரணத்தை விளக்கி நின்ருன் எனப் பலர் இவனைப் பழித்து வந்தனர். இவன் வாழ்வு பழியா யிழிந்து வந்தது. சத்திரம் பந்தெனச் சார்ந்து மாந்தரை எத்திர நிலையிலும் இடர்கள் செய்ததால் சத்திர பந்தெனச் சமைந்த பேருக்கு மித்திர யிைவன் விளங்கி நின்றனன். * , இன்னவாறு இன்னல்களே இழைத்து வந்த இவனே மக்கள் யாவரும் வெறுத்து விலக்கினர். அரச பதவியை