பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3.193. சோம்பல் ஒருவன் குடியுள் புகின் அவனே அது பகைவர்க்கு அடிமையாக்கி விடும். மடிமை = மடியினது தன்மை. அ.தாவது சோம்பி யிருக்கும் புன்மை. மை விகுதி இயல்பான தன்மையை உணர்த்தி அதன் மயலே விளக்கி கின்றது. குடிமை = குடியின் இயல்பான உயர் நீர்மை. சிறந்த குணங்லன்கள் நிறைந்த மேலோர்கள் வழி வழியே பிறந்து வருகிற விழுமிய குடும்பமே குடிமை என ப் பண்புப் பெயரால் இங்கே அறிய வங்தது. உயர்ந்த குடிப் பிறந்தார்; நல்ல குல மக்கள் என்று இவ்வாறு கூறி வருவன எல்லாம் தோன்றி கின்ற அசான் ருேரின் ஆன்ற குண நீர் மைகளே நோக்கியே வக் துள்ளன. நீர்மை வழியே சீர்மை விளேகிறது. சீலம் தோய்ந்து வரும் அளவு மேலான குடியாக ஞாலம் அதனே உவந்து புகழ்ந்து வருகிறது. உற்ற மனிதர் ஒழுக்கம் குன்றில்ை அக் குடியும் குற்றமுடை யதாய் இழுக்கம் அடைந்து இழிந்து படுகிறது. ஒழுக்கம் உடைமை குடிமை. (குறள் 133) குடிமை என்ருல் என்ன? எப்படி இருக்தால் அதற்கு அப் பெயர் அமையும் என்பதைத் தேவர் இஷ் வாறு முன்னமே செம்மையாய் விளக்கி யிருக்கிரு.ர். குடி, குலம் என்பன அங்கே பிறந்த மக்களுடைய சிறந்த ஒழுக்கங்களாலேயே உயர்ந்த பெயர்களோப் பெற்று எவ்வழியும் ஒளி பெற்றுள்ளன. குலம் சுடும் கொள்கை பிழைப்பின். (குறள், 10 19) மனிதன் பிழை புரிய நேரின் அவன் பிறந்த குடியும் குலமும் இழிவுற நேரும் என்பதை இங்கே தெளிவாத் தெரிந்து கொள்கிருேம். குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ? (நெய்தல்கலி: 18) சொன்ன சொல்லேத் தவறி நீ பொய்யா! கடந்தான்