பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2846 திருக்குறட் குமரேச வெண்பா தமக்கு உரிய கடமைகளே அ றி ங் து முறையே செய்து வருபவரே சிறந்த மனிதராய் உயர்ந்து சீருடன் வருகின்ருர். செய்யாமல் ஒழிந்துவிடின் அவர் சிறுமை பாய்த் தாழ்ந்து படுகின் ருர். அரசர் அந்தணர் வணிகர் முதலிய வகைமைகள் மனித சமுதாயத்தில் தகைமைகளாய் அமைந்துள்ளன. அவரவர் செய்யவுரிய கருமங்கள் விதி நியமங்களாய் வந்துள்ளன. அவை தரும நூல்களாய்ப் பெருமை பெற்றிருக்கின்றன. அவை விதித்துள்ள கடமைகளே உரிமையுடன் கருதிச் செய்பவர் உ று தி நலன்களே அடைந்து உயர்ந்து திகழ்கின்ருர். அரசனுக்கு உரிய கடமை என்ன ? நாட்டை எங்கும் வளப்படுத்தி நன்கு பாதுகாத்தல். குடிசனங்களை எவ்வழியும் செவ்வையாக ஆதரித்தல். நல்லோரை நாடி யறிந்து நயமுடன் போற்றுதல். தீயோரை மாய நூறி யாண்டும் சேராமல் நீக்குதல். கள்வர் முதலிய புல்லினங்களே ஒல்லேயில் ஒழித்தல். பகைவரை மிகைபுரியாமல் அடக்கி ஒடுக்குதல். மறப்பின் றி எதையும் சிறப்பாச் செய்தல். இன்னவாருன செயல்களே மன்னன் என்ன வகை யிலும் மறவாமல் யாண்டும் மதித்துச்செய்யவுரியவன். புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் என்று: இவ்வாறு உறுதியாய் வலியுறுத்தி யுள்ளார். செய்யா வழி வெப்யபழி விளேயும் ஆதலால் அது விளையா வகை அருள்புரிந்து மொழிந்தார். இந்த அருளுரையை அறிந்து தொழில் புரியாமல் மருளராய் மறந்து ஒழியின் கொடிய துன்பங்கள் கெடிது விளையும் என இறுதியில் அச் கறுத்தி யிருக்கிருர். விதித்த விதியை விலகி மதி கேட ய்ை மடிந்திருந்தால் பின்பு வழிவழியே அவன் அதி கேடனுகிருன். கேடு நேராமல் நாடிச் செய்க. மனிதன் செயகிற நன்மை தீமைகளின் பலன்கள் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து படர்ந்து வரும் ஆதி.