பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2858 திருக்குறட் குமரேச வெண்பா மையாய் அடைய நேர்வர். கருதாதவர் எதையும் எளிதே அடைய முடியாது என்பது மன் என்னும் சொல் லால் உணர வந்தது. வெளியே தெளிவாய்த் தெரியா மல் ஒழிந்துள்ள பொருளே உணர்த்தியுள்ளமையால் இதனே ஒழியிசை என்பது இலக்கண வழக்கு. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம்மூன் றென்ப மன்னேச் சொல்லே. (தொல்காப்பியம்) மன்னே அசைநிலே ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி நிலே பே ருகும். (நன்னூல்) இந்த இயல் விதிகள் ஈண்டு எண்ண உரியன. மறவியால் கேடுவரும் என்ருர் முன்பு: இதில், மற. வாதவர் அரிய பல ஆக்கங்களே ப் பெறுவர் என்கின் ருர். பொச்சாவாமையால் விளேங்துவரும் ஊதியங்களே உச்சமாக நன்கு உணர்த்தி யுள்ளார். தாம் விரும்பி யதை விரும்பியபடியே அடைதல் யார்க்கும் அரிது: அந்த அரிய பொருள் எளிதாய் விரும்பி வருதற்குரிய அதிசய மந்திரம் இங்கே சிங்தை தெளிய வங்துள்ளது. அந்த மந்திரம் என்ன ? மறதியுருது கினேங்ததையே கினேந்து முனைந்து முயன்று வருதல். தன் உள்ளத்தில் பொச்சாப்பு ஒழியின் உலகத்தில் அவன் பெரிய பாக்கியவான்; அரிய சித்தன். எண்ணி யதை எண்ணியபடியே எய்துகின்ற புண்ணிய யோகி. கருதியதை யாதும் மறவாமல் கருதி முயன்று வரின் அந்தப் பொருள் அ வ சீன உரிமையாக நாடி ஓடிவரும். மறவாதவனே இறவாதவன யின்புறுகிருன். யாரும் காண முடியாத அ ரி ய பரம் பொருளும், உள்ளியபடியே ஓயாமல் உள்ளி உள்ளி உள்ளம் உருகி வரின் எளிதே விரைந்து நேரே வங்து அளிபுரிந்தருளும். வலப்பாகம் செழும்பவளச் சோதி என்ன வானிலச் சோதிஎன்ன மற்றைப் பாகம் கலப்பான திருமேனி அணிந்த நீற்ருல் கதிர்முத்தின் சோதி என மேனே யீன்ற