பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2860 திருக்குறட் குமரேச வெண்பா அசைவிலா உட்போதத்தால் அனைத்தினும் உளத்தைவாங்கி இசைவசெய் திச்சை யின்றி யிளேப்பறப் புந்தி யாறி விசையிலா நெஞ்சால் நெஞ்சை விண்என விமலம் ஆக்கி வசையறு மவுனி ஏகன் சாந் தமே வடிவ மாகி. (1} சமனுமாய் இதயம் விண் போல் சாலவும் தெளிந்து நிற்பாய் நிமலமாம் புந்தி திண்மை நிறைவுற்று மூடம் இன்றி அமர வந் தன பின் செல்லும் அரசனும் பகிர தன் போல் குமரனே !! அரிய தேனும் குறைவறப் பெறலாம் என்ருன். ஞான வாசிட்டம்) உள்ளத்தைப் புனிதமாக்கி ஒ ரு முகப்படுத்தி உள்ளியதையே உள்ளி ஊக்கி நின்றதால் அரிய ஆகாய கங்கையும் வெள்ளமாய்ப் பெருகி விரைந்து பகீரதன் எதிரே நேரே வந்து பாய்ந்தது; மனம் தெளிந்து நேர்மை யால்ை அரியதையும் எளிதே பெறலாம் என்று வசிட்ட முனிவர் இராமபிரானுக்கு இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மறப்பெனும் பகைவனே மதியின் ஆற்றலால் இறப்புறச் செய்தவன் எய்த எண்ணிய சிறப்புயர் பொருளுடன் தேசும் இன்பமும் அறப்பெருந் திருவையும் அடைந்து வாழ்வனுல். உள்ளம் திருந்தியபோது உளவாகும் பலன்களே யும் நலன்களேயும் இதில் உணர்ந்து கொள்கின்ருேம். எண்ணியதையே எண்ணி முயல்பவன் அரிய பெரிய பொருளேயும் நேரே உரிமையாய் அடைகிருன். இவ்வுண்மை பகீரதன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். சூரியகுல மன்னகிைய இவன் தன் முன்னேராகிய அகரரை உய்விக்கும் பொருட்டுத் தெய்வ கங்கையை எய்த விரும்பின்ை. அரசை அமைச்சரிடம் ஒப்பித்து விட்டு இமயச்சாரலே யடைந்து கங்கையை எண்ணிக் கடுங்தவம் புரிந்தான். ஆண்டுகள் பல கழிந்தும் யாதும் அயராமல் ஏ. து ம் தளராமல் கருதியதையே கருதி உறுதியுடன் இவன் ஊக்கி கின்ருன். முடிவில் கங்கா தேவி தோன்றிள்ை. கண்ணுதல் கடவுளே முன்னமே