பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 04 திருக்குறட் குமரேச வெண்பா உவந்து கொள்ளாமல் எள்ளலாய்ச் செருக்கி யிருங் தான். புலவரது உள்ளம் கொதித்தது: "முன்னரே உற வாய்ப் பழகியிருந்தும் இன்று என் விழுமிய செய்யுள் களின் அருமையை அறிந்தும் யாதும் மகிழாமல் ஏதும் மதியாமல் செல்வச் செருக்கால் திமிர் கொண்டிருக் தானே !' என்று சீற்றம் மீக்கொண்டு ஆலயம் புகுந்து சிவபெருமான் சந்நிதியில் கின்று கண்ணிர் சொரிந்து முறையிட்டார்: ஆண்டவா : அரசன் இன்று என் க்வி களே அவமதித்தான்; தமிழின் காதப் பிரமமாயுள்ள உன்னேயே அவன் எண்ணி இகழ்ந்ததாக என் உள்ளம் கொதிக்கிறது; தாய்மொழியை மதியாதவன் பேய் வழி யினன் என்று நான் மதிக்கிறேன்: இனி ஈண்டு கில் லேன்; இதோ போகிறேன் ' என்று வடதிசை நோக்கிச் சென்ருர், இறைவனும் இறைவியுடன் புலவர் பின்னே போனர்; சங்கப் புலவர்களும் பின் தொடர்ங் தனர். கோவிலுள் சிவலிங்கம் காணுமையால் மறையவர் பாவ ரும் மறுகிப் புலம்பி அரசனிடம் போப் அழுது மொழிங் தார். மன்னன் ப த ஹி இன்னலுழந்து துடித்தான்: வைகை நதியின் தென்பால் ஐயன் உருவம் அமர்க் திருப்பதை அறிந்து விரைந்து வந்து தரையில் விழுந்து பணிந்து தொழுது அழுது துதித்தான். மன்னன் துதித்தது. படர்ந்துபணிந் தன்புருக்கும் கண்ணிச் சோர்ந்து ஆனந்தப் பெளவத்து ஆழ்ந்து கிடந்தெழுந்து நாக்குழறித் தடுமாறி நின்றிதனேக் கிளக்கும்: வேதம் தொடர்ந்தறியா அடிசிவப்ப நகர் புலம்ப உலகின்ற தோகையோடு இங்கு அடைந்தருளும் காரணம் என்? அடியேனுல் பிழையுளதோ ? ஐயா ! ஐயா ! அல்லதை என் த மரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லேவிலங் காதிகளால் இடையூறின் தமிழ்நாட்டில் எய்திற் ருலோ?