பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2876 திருக்குறட் குமரேச வெண்பா மன்னவன் கோல் நோக்கி மக்கள் வாழ்வர் என்று முன்னம் கூறினர்; இதில், வேதமும் அறமும் அதனல் விளங்கி வரும் என்கின்ருர். வேதத்தை அந்தணர் நூல் என்றது. வழிமுறையே உரிமையுடன் அவர் அதனை ஓதி வருதல் கருதி. அந்த னர் என்ற பதம் அழகிய தண்ணளியுடையவர் என் னும் பொருளினது ஆதலால் அக்காரணத்தைக் கருதிய பொழுது அந்த இயல்புடையார்க்கெல்லாம் அ.துே உரி மையாய் நிற்கும்; கருதாதபோது காரண இடுகுறியாயப் நின்று பார்ப்பனரைக் குறித்து வரும். அரிய மாத வரும் பெரிய முனிவர்களும் வேதம் ஒது தலே உரிமையாக வுடையவர். சிறந்த அறிவு நலன்கள் நிறைந்திருப்பது ஆதலால் வேதம் பாடி வருவதால் நாட்டுக்கும் மக்களுக்கும் தன்மை கூடி வரும். அரசன் நீதியாய் ஆட்சி புரிந்து வருங்கால் அவரவர் கடமையை உரிமையுடன் ஆற்றி வருவர். அந்த வழியில் அங்தனர் தொழில் முந்துற ஈண்டு நன்கு தெரிய வங்தது. ஒதல் அந்தணர் வேதம் பாட. (மதுரைக்காஞ்சி} பாண்டிய மன்னர் ஆட்சியில் மதுரைமா நகரில் வேத கீதம் ஓங்கியிருந்ததை இதில் உணர்ந்து கொன் கிருேம். துTய அறிவுடையது நேயமா அறிய வங்தது. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீரூர்; பூவின் இதழகத் தனைய தெருவம்; இதழகத்து அரும்பொகுட் டனேத்தே அண்ணல் கோயில்; தாதின் அனேயர் தண்தமிழ்க் குடிகள்; தாதுண் பறவை யனையர் பரிசில் வாழ்நர்; பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது.எம் பேரூர் துயிலே. (பரிபாடல்)