பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2888 திருக்குறட் குமரேச வெண்பா செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என எங்கனும் போகிய இசையோ பெரிதே. (சிலப்பதிகாரம் 13) பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்து வங்த காலத்தில் இந்த நாடு இருந்த மாட்சியை இது காட்டியுளது. காட் டில் வாழுகின்ற கரடி புலி முதலிய கொடிய பிராணி களும் யார்க்கும் இடர் செய்யாமல் இனியனவாயிருங் துள்ளன. செங்கோல் தென்னவர் காக்கும் காடு ஆத லால் இன்னவாறு எங்கும் நன்மையாய் யாண்டும் இசைபெற்று நின்றது என இளங்கோவடிகள் உளங் கனிங்து வியந்து புகழ்ந்துள்ளார். நீதியான சிறந்த ஆட்சிக்கு அடையாளம் அந்த நாடு பீடை யாதும் இன்றிப் பெருமையாயிருத்தலும், மக்கள் எல்லாச் செல்வ வளங்களும் வாய்ந்து கல்ல. அறிவு நலன்கள் தோய்ந்து யாண்டும் மாண்புடன் மகிழ்ந்து வாழ்ந்து வருதலுமே யாம். தெள்வார் மழையும் திரை யாழியும் உட்க நாளும் வன்வார் முரசம் அதிர் மாநகர் வாழும் மாக்கள் கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லே;யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லே மாதோ!" கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவை வல்லரல்லாரும் இல்லை; எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லே மாதோ!; (இராமாயணம்) தசரத மன்னன் ஆட்சியில் கோசல தேசத்து மக்கள் மருவியிருந்த நிலைமைகளே இவை சுவையா விளக்கி யுள்ளன். கவிகளுள் பொதிந்துள்ள நயங்களேக் கருதி யுணர்பவர் உள்ளம் பெரிதும் வியந்து மகிழ்வர். கடல்படும் அமுதும், மல்லற் கான்படும் அமுதும், ஒங்கும் தடவரை அமுதும், ஒன்றித் தலே மயக் குற்ற வாற்றல் உடைதிரை அமுதம் ஒன்றே உடையவிண்ணுடு கொல்லோ திடதநா டதற்கு நேரா நிகழ்த்தலாம் தகைமைத் தம்மா! * (நைடதம்)