பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

15

பட்டிருந்தான், அவனை வாரி யடிக்கவந்த யானையைக் கையிலிருந்த வேலால் தாக்கினான். உடலிற் பதிந்த வேலோடு வீரிட்டு ஓடியது யானை. யானையோடு வேலும் போயிற்றே என்று வீரன் வருந்தினான்.

அப்பொழுது மாற்றான் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அவன் மார்பில் பாய்ந்தது. வீரன் அதைப்பற்றித் திருகிக் கையில் எடுத்துக்கொண்டு, மேலும் போர்செய்யத் தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டதே என்று மகிழ்ந்து நகைக்கிறான். போரிட இன்னுமொரு யானை வந்தாலும் வரட்டுமென்று மகிழ்ச்சியோடும், வெறியோடும் வேலேந்தி நோக்குகிறான். அவன் நெஞ்சில் பகைவனுடைய வேல்தாக்கிய புண்ணையும், அதலிருந்து கொட்டும் குருதியையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் நெஞ்சில் மகிழ்ச்சியே கூத்தாடுகிறது என்று வள்ளுவர் பொர்த்திறத்திலும், ஒரு செயல் திறத்தைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார்.

        கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
        மெய்வேல் பறியா நகும். (774)

இது மூன்றாவது யானை.

4. ஊக்கத்தோடு செய்

எக் காரியத்தைச் செய்தாலும் ஊக்கத்தோடு செய்தல் வேண்டும். அப்போது அச் செயல் விரைவில் வெற்றிபெறும் என்று வள்ளுவர் கூறுகிறார். அங்கும் ஒரு யானை, மிகவும் பெரியது. நீண்ட தந்தங்களையுடையது!

அப்போது ஒரு புலி யானையை நோக்கிப் பாய்ந்தது. மிகச் சிறிய உருவம், மிகச்சிறிய நகம் என்றாலும், அப் புலி