பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

17

முடியுமா? முடியாது. ஆனால் அவன் அதைப் பிடித்தாக வேண்டும் என்றும் கூறுகிறார். எப்படி? மற்றொரு பழகிய யானையைக் கொண்டு அந்த யானையைப் பிடிக்கலாம். அதுபோலத் தன்னால் செய்யமுடியாத ஒரு செயல் மிகப் பெரியதாக இருந்தாலும், அதற்கு உற்றவர் துணையுடன் அக்காரியத்தைச் செய்தாகவேண்டும் என்று. செயல்திறனுக்கு இங்கும் யானையையே காட்டி ஒரு புதுவழி வகுத்துக் கூறியுள்ளார்.

        வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
        யானையால் யானையாத் தற்று. (678)

இது ஐந்தாவது யானை.

6. பொருளை வைத்துச் செய்

ஒரு வணிகத்தை நடத்தினாலும் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினாலும் நிறையப் பொருளை வைத்துத் தொடங்கவேண்டும் என்று வள்ளுவர் கருதுகிறார்.

ஒரு வணிகன் 100 பாக்கு மூட்டைகளைக் கொள் முதல் செய்து வைத்திருந்தான். திடீரெனச் சந்தையில் விலை குறைந்தது: அந்த வியிைலிலும் 100 மூட்டைகளைக் கொள் முதல் செய்தான். பின்னும் விலை குறைந்தது: அதிலும் 100 மூட்டைகளைக் கொள்முதல் செய்தான். கடைசியாக அவனது சராசரி விலையும் சந்தை விலையும் ஒன்றாக வந்தது. அதற்குமேல் விற்று இலாபம் அடைந்தான். அவனிடம் நிறையப் பொருள் இல்லாதிருந் திருக்குமானால் அவன் தொழிலில் இழப்பு ஏற்பட்டிருக்கும். இதைக் காட்டவும் வள்ளுவர் நம்மை யானைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

தி—2