பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லாமை

101


அளிக்கக் கூடிய பெருமை கல்விக்கிருப்பதால் அத்தகைய கல்வியைக் கற்றறிந்த பெரியோர்கள் மேலும் மேலும் விரும்பிக் கற்பர்.

காமுறுதல்-விரும்புதல்,ஆசைப்படுதல். 399

10.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விச் செல்வமேயாகும். அதைத் தவிரப் பிற செல்வங்களெல்லாம்: சிறந்த செல்வங்கள் அல்ல.

கேடு-அழிவு; விழுச் செல்வம்-சிறந்த செல்வம்; மாடு- செல்வம்; மற்றையவை-பொன், மணி முதலிய. செல்வங்கள். 400

41 . கல்லாமை


1.அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

அறிவு அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ள நல்ல நூல்களைக் கற்காமல் ஒருவன் கற்றறிந்தோர் கூடிய சபையில் புகுந்து ஒன்றைப் பேசுதல், கோடு கிழித்து இடம் வகுத்துக் கொள்ளாமல் சதுரங்கம் ஆட முயல்வதற்குச் சமம் ஆகும்.

அரங்கு-சதுரங்கம் ஆடுதற்குக் கோடு கீறி, வகுத்துக் கொள்ளும் இடம், அறை: வட்டு-சூதாடு கருவி: கோட்டி-கற்றறிந்தோர் கூடியுள்ள சபை. 401

2.கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றிற்று.

கல்வியறிவு சிறிதும் இல்லாத ஒருவன் ஒரு சபையில் எழுந்து பேச, அவன் பேச்சைக் கேட்க விரும்புதல்; இரண்டு தனங்களும் இல்லாதவளை ஒருவன் மணக்க விரும்புதற்குச் சமம் ஆகும்.

கல்வியறிவு இல்லாத ஒருவன் ஒரு சபையில் எழுந்து பேச விரும்புதல் இரண்டு தனங்களும் இல்லாத ஒருத்தி பெண் தன்மையை விரும்புதற்குச் சமம் என்றும் பொருள் கொள்ளலாம். 402