பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

திருக்குறள்


பகைவர் வஞ்சிக்க எண்ணும் எண்ணங்கள் யாவும் பயன் தாராமற் போகும்.

காதல்-விருப்பம், ஆசை; காதல-ஆசைப்படும் பொருள்கள்; உய்க்கிற்பின்-அனுபவிக்க வல்லவன் ஆயின்; ஏதிலார்-பகைவர்; ஏதில-பயனற்றன; நூல்-எண்ணம். 440

45. பெரியாரைத் துணைக்கோடல்


1.அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

நீதி நெறிகளை அறிந்து முதிர்ச்சியடைந்த பெரியோரின் நட்பைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கொள்ளும் போது, அந்தப் பெரியோரின் தகுதிக்கு ஏற்றபடி அவரிடம் நடந்து கொள்ள வேண்டியதை ஆராய்ந்து அறிந்து, அவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

அறன் அறிந்து-நீதி நெறிகளை நூல்களைக் கொண்டும், அனுபவ வாயிலாகவும் அறிந்து; மூத்த-அறிவு; ஒழுக்கம், வயது ஆகிய இம்மூன்றிலும் முதிர்ந்த,

துணைக்கோடல் - துணையாகக் கொள்ளுதல். 441

2.உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

ஒருவனுக்கு நேர்ந்துள்ள துன்பங்களைப் போக்கக் கூடியவராயும், மேலும் துன்பம் வாராதபடி முன்னதாக அறிந்து, அதனைக் காக்க வல்ல தன்மையுடையவராகவும் உள்ள பெரியோரை, அவர் மகிழும் வண்ணம் உபசரித்து, ஒருவன் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

உற்ற-நேர்ந்த; உறாஅமை-நேராதபடி; பேணி-போற்றி, அவர் மகிழும் வண்ணம் உபசரித்து. 442

3.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

கல்வி, ஒழுக்கம், அனுபவம் முதலியவைகளால் சிறந்த பெரியாரை அவர் மகிழும் வண்ணம் உபசரித்துத் தம்