பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

திருக்குறள்


செய்யத் தகுந்த செயல்: 1. சிறிது முயற்சியால் முடியக் கூடிய செயல். 2. பயன் தரும் செயல், 3. பெரிய பயன் விளையும் செயல், 4. சந்தேகத்துக்கு இடம் இல்லாத செயல். 466

7.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

செய்யத் தொடங்கும் ஒரு செயலை முன்னதாகவே நன்றாக ஆராய்ந்து, பிறகு அதைச் செய்யத் தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பிறகு, அதன் முடிவை எண்ணிப் பார்க்கலாம் என்பது தவறு.

துணிக-செய்யத் தொடங்குக; இழுக்கு-தவறு; குற்றம். 467

8.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

தகுந்த வழியில் முயலாத முயற்சி (தவறு நேர்ந்த பிறகு) பலர் துணையாக இருந்து பாதுகாத்த போதிலும் குறைபாடு டையதாகவே இருக்கும்.

ஆறு-வழி, இங்கே நல்ல வழி;: வருந்தா-முயலாத, செய்யப்படாத; வருத்தம் இங்கே முயற்சி என்னும் பொருளில் வந்துள்ளது: பொத்துப் படல்-தவறு படல். 468

9.நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவர்அவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

அவரவர் குணநலன்களை அறிந்து அவரவருக்குத் தக்க வகையில் நலன்களைச் செய்யா விட்டால் நன்மை புரியும் போதும் கு்ற்றங்கள் உண்டாதல் கூடும்.

நன்றாற்றல்-நல்ல செயல்களைச் செய்தல், நன்மை புரிதல்; ஆற்றாக்கடை-செய்யாத போது. 469

10.எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

உலகத்தவர் தம் கருத்துக்கு ஒத்து வராத செயல்களை ஏற்றுக் கொள்ளார். ஆதலால், ஒருவர் தமக்கு நல்லதாகத்