பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

திருக்குறள்



அலை-வருத்துதல்; அல்லவை-நீதி அல்லாதவை.

கொலை செய்வோரால் நேரும் துன்பம் ஒரு பொழுதே ஆகும். கொடுங்கோலரசனால் என்றும் துன்பம் ஆதலின் கொலை மேற்கொண்டாரினும் கொடுங்கோல் வேந்தன் கொடியவனாவான். 551

2.வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

ஆட்சிக் கோலைக் கையில் ஏந்திய அரசன் கொடுங்கோலனாய்க் குடிகளைப் 'பொருள் தா' என்று வேண்டிக் கேட்டல், வேல் ஏந்தி நிற்கும் ஆறலைக் கள்வன் வழிச் செல்வோரைப் 'பொருள் கொடு’ என்று அச்சுறுத்திக் கேட்கும் செயலைப் போன்றதாகும்.

இடு-தா, கொடு; இரவு-வேண்டிக் கேட்டல். 552

3.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

ஒவ்வொரு நாளும் தன் ஆட்சியில் ஏற்படும் குற்றங்குறைகளை ஆராய்ந்து, ஆட்சி செலுத்தாத அரசன் நாள் தோறும் தன் நாட்டினை இழந்து கொண்டே வருவான். 553

4.கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

அமைச்சர், அறிஞர் முதலானவர்களோடு கலந்து ஆலோசிக்காமல், நீதி நெறி தவறி எதையும் செய்யும் அரசன், பொருளையும், குடிகளையும் ஒரே சமயத்தில் இழந்து விடுவான்.

கூழ்-பொருள்; ஒருங்கு-ஒரே சமயத்தில்; கோல் கோடி-நீதி நெறி தவறி; சூழாது-கலந்து ஆலோசிக்காமல்; (தானே எண்ணிப் பாராமல் என்றும் கூறலாம்) 554

5.அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அரசனது கொடுங்கோல் ஆட்சியால் துன்பப்பட்டு, அத்துன்பத்தைத் தாங்க முடியாமல் அழுது சிந்தும் குடி