பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

திருக்குறள்



நிலை பெற்ற ஊக்கத்தைத் தம் கைப்பொருளாக உடையவர் செல்வம் இழந்த போது அதனை இழந்து விட்டதாக வருத்தப்பட மாட்டார்.

ஆக்கம்-செல்வம்; அல்லாவார்-வருந்தார்; ஒரு வந்தம்-நிலை பேறு; கைத்து-கைப்பொருள். 593

4.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையான் உழை.

தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடம் செல்வமானது தானே அவன் உள்ள இடத்துக்கு வழி கேட்டுக் கொண்டு செல்லும்.

அதர்-வழி; வினாய்-வினவி; அசைவு இலா-உள்ளத் தளர்ச்சி இல்லாத; உடையான் உழை-உடையானிடம். 594

5.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

நீர்ப் பூக்களின் தாளின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவினதாக இருக்கும்; அது போல் மக்களின் உயர்வு, அவர் தம் ஊக்கத்தின் அளவினதாகும்.

மலர் நீட்டம்-பூக்களின் தாள் நீட்சி; மாந்தர்-மக்கள். 595

6.உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

நினைப்பதெல்லாம் உயர்வுடையதாகவே இருத்தல் வேண்டும். ஊழ்வலியினால் அது முடியாமற் போனாலும், அந்த எண்ணம் இகழப்படாத தன்மையுடையது.

அது தள்ளினும்-அந்த எண்ணம் முடியாமற் போனாலும்; 'ஊழ்வினை' தடுத்தாலும், என்றும் கொள்ளலாம், 596

7.சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.

யானையானது தன் உடம்பிலே புதையுண்ட அம்புத் தொகுதிகளால் புண்பட்டு இருந்தாலும் சிறிதும் தளர்ச்சியடையாமல், தன் பெருமையை நிலை நாட்டும்; அது போல