பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

திருக்குறள்முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தை வளர்க்கும். முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையில் சேர்த்து விடும்.

திரு-செல்வம்; ஆக்கும்-வளர்க்கும்; முயற்றின்மை-முயற்சி இல்லாமை; இன்மை-வறுமை; புகுத்தி விடும்-அடைவித்து விடும். 616

7.மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

சோம்பலையுடையவன் இடத்திலே கரிய நிறமுடைய மூதேவி தங்கியிருப்பாள் என்று கூறுவர். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் தங்கியிருப்பாள்.

மடி-சோம்பல், சோம்பலுடையவன்; மா-கரிய நிறம்; முகடி-மூதேவி; தாள் உளாள்-முயற்சியில் தங்கியிருப்பாள்; தாமரையினாள்-தாமரைப் பூவில் வாழும் இலக்குமி,திருமகள். 617

8.பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

முயற்சிக்குத் தகுந்த பலனைத் தருகின்ற விதி இல்லாமல் இருத்தல் யார்க்கும் குற்றம் ஆகாது. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே குற்றம் ஆகும்.

பொறி-விதி. ஊழ், கண், காது முதலிய உறுப்புக்களுமாம்; பழி-குற்றம்; அறிவறிந்து-அறிய வேண்டுவனவற்றை அறிந்து; ஆள்வினை-முயற்சி. 618

9.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

செய்து முடிக்க முயன்ற ஒரு செயல் ஊழ்வலியின் காரணமாக முற்றிலும் முடியாமற் போனாலும் உடம்பு வருந்த உழைத்த முயற்சியின் அளவுக்குப் பயன் கிடைத்தே திரும்.

தெய்வம்-ஊழ்வலி; மெய்-உடல். 619

10.ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.