பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினை செயல்வகை

179



செயலைச் செய்பவன் செய்ய வேண்டிய முறையாவது அந்தச் செயலின் உண்மை இயல்பினை முன்னரே அறிந்தவனுடைய எண்ணத்தைத் தான் அறிந்து கொண்டு, அதனைத் தன் உள்ளத்தே ஏற்றுக் கொள்ளுதலே ஆகும்.

உள்ளறிவான்-ஒரு செயலின் உண்மை இயல்பினை முன்னரே அறிந்தவன். 677

8.:வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலைக் கொண்டு பிறிதொரு செயலையும் முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அஃது ஒரு மதம் பிடித்த யானையைக் கொண்டு, மற்றொரு மதம் பிடித்த யானையைப் பிடித்துக் கொள்வது போன்றதாகும்.

கோடல்-கொள்ளுதல், நனைகவுள்-மதத்தால் நனைந்த கன்னம்; யாத்தற்று-கட்டுதல் போலும்; யா-கட்டு. 678

9.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

தம்மிடம் முன்னரே நட்புக் கொண்டுள்ளவர்கட்கு நல்லனவற்றைச் செய்து, அவர்களை மகிழச் செய்வதற்கு முன்னர், தம் பகைவரோடு சேராமல் தனியே இருப்போரை நட்பாக்கிக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்eகது.

நட்டார்-நண்பர்; ஒட்டார்-எவரிடமும் கலவாமல் இருப்பவர், பகைவர்; ஒட்டிக் கொளல்-சேர்த்துக் கொள்ளுதல்.

ஒட்டாரை ஒட்டிக் கொளல்-பகைவரோடு சேராதரைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளல் என்பர் பரிமேலழகர்; பகைவரையே தன்னிடம் சேர்த்துக் கொள்ளல் என்பர் மணக்குடவர். 679

10.:உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

சிறிய நாட்டுக்கு அமைச்சராக உள்ளோர்; தம்மினும் வலியார் படை எடுத்தவிடத்துத் தம் குடியும், படையும்