பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூது



செயல்களைப் பற்றித் தூதுரைக்கச் செல்பவன் எத்தகைய பண்புடையவனாக இருத்தல் வேண்டும் எனில், சிறந்த நூல்களை எல்லாம் கற்றுணர்ந்த ஒரு புலவன் முன்பு சென்று தனக்குள்ள நூற்புலமையைக் கூறி, வெற்றி பெற்றுத் திரும்பக் கூடியவனைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவனாக இருத்தலாம்.

நூலார்-பல நூல்களையும் கற்றறிந்த புலவர்; வேலார்-வேல் முதலிய போர்க் கருவிகளைக் கையாளும் அரசர். 683

4.அறிவுரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

இயற்கை அறிவு, நல்ல தோற்றம், பலரோடும் பல காலம் ஆராய்ந்த கல்வி அறிவு இம்மூன்றையும் குறைவறப் பெற்றிருப்பவனே வேற்று வேந்தரிடம் தூதுரைக்கச் செல்லத்தக்கவன்,

வினை-தூது. 684

5.தொகச் சொல்லித் தூவாதநீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் துாது.

பல செய்திகளையும் தொகுத்துச் சொல்லியும், பயனற்றவற்றை நீக்கியும், கேட்டறியும் வேற்றரசர் உள்ளம் மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவனே தூதன் ஆவான்.

தொகச் சொல்லுதல்-சுருங்கச் சொல்லுதல்; தூவாத - வேண்டாதவை; நக-மகிழும்படி. 685

6.கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாம் துாது.

தூதுக்கு வேண்டிய உபாயங்களையெல்லாம் தெரிந்து கொண்டு, மாற்றரசன் வெகுண்டு நோக்கினால், அந்தக் கொடிய பார்வைக்கும் அஞ்சாதவனாய், அவன் உள்ளத்தில் நன்கு பதியுமாறு தன் அரசன் தெரிவித்ததைச் சொல்லி, அந்தந்தக் காலத்துக்கு ஏற்றதை அறிந்து நடந்து கொள்பவனே தூதனாவான்.

கற்று-தூதுக்கு வேண்டிய உபாயங்களையெல்லாம் தெரிந்து கொண்டு; கண் அஞ்சான்-கண்பார்வைக்கு அஞ்சாதவனாய்; செலச்சொல்லி-உள்ளத்தில் பதியும்படி சொல்லி,