பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

திருக்குறள்



8.அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

பகைவனை எதிர்த்துத் தாக்கும் வன்மையும், எதிர்த்த படையை எதிர்த்து நின்று முறியடிக்கும் வல்லமையும் இல்லையானாலும், படை தன் தோற்றப் பொலிவால் பெருமை பெறும்.

படைத்தகை-படையின் தோற்றப் பொலிவு. அஃதாவது யானை, குதிரை, தேர், காலாள் முதலியவற்றை ஒழுங்குபட நிறுத்தி வைத்து அழகினை மிகைப்படுத்திக் காட்டுதல்; பாடு-பெருமை. 768

9.சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

படைபலம் வரவரக் குறைந்து காணப்படுதலும், நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லாமல் இருக்குமானால், அத்தகைய படை வெற்றி பெறும்.

சிறுமை-இழிவாகக் காணப் பெறும் தோற்றம்; செல்லாத் துனிவு-உள்ளத்திலிருந்து என்றும் நீங்காத வெறுப்பு; வறுமை -தரித்திரம். 769

10.நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இவ்வழி இல்.

ஒரு படையானது நெடுங்காலமாக உள்ள வீரர் பலரை உடையதாக இருந்தாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாத போது அந்தப் படை இல்லாததற்கே சமமாகும். 770


78. படைச் செருக்கு


1.என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.

பகைவர்களே, என் தலைவன் முன்பு எதிர்த்து நில்லாதீர்கள்; என் தலைவனை எதிர்த்து நின்று சண்டையிட்டு மடிந்து, மண்ணில் புதைக்கப் பெற்றுத் தமக்குக் கல் நடப்பெற்றவர் பலர்.