பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகைமாட்சி

231



ஒருவன் தனக்குச் செல்வம் வரும் போது இகலைக் கருத மாட்டான்; தனக்குக் கேடு வருவதற்குக் காரணம் நேரும் போது இகலை எதிர்த்து வெல்லக் கருதுவான் .

மிகல் காணுதல்-இகலை எதிர்த்து வெல்லக் கருதுதல்; கேடு-துன்பம்,தீவினை.

நல்வினையுடையவர் இகலை எதிர்க்க மாட்டார்; தீவினை யுடையவரே எதிர்க்க எண்ணுவர் என்பது கருத்து. 859

10.இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

ஒருவனுக்கு இகல் என்னும் மாறுபாட்டினாலே துன்பமான எல்லாம் உண்டாகும்; அவ்வாறு மாறுபடாது நட்புக் கொள்வதாலே நல்ல குணம் உடையவன் என்னும் மதிப்பு ஏற்படும்.

இன்னாத-துன்பம் தருவன; நகல்-மகிழ்தல், நட்புடன் இருத்தல்; நன்னயம்-நல்ல பண்பு, நற்குணம்; நன்னயம் என்பதற்கு 'நல்ல நீதி’ என்றும் பொருள் கொள்வர்; செருக்கு-மதிப்பு, பெருமிதம். 860

87. பகைமாட்சி


1.வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

தம்மைக் காட்டிலும் வலிமையினால் மிகுந்துள்ளவர்களைப் பகைத்து எதிர்த்தலை விட்டொழிக; தம்மைப் போற்றாத எளியாரைப் பகைத்தலை மேற்கொள்ளுக.

மாறேற்றல்-பகைத்து எதிர்த்தல்; ஒம்புக-விட்டொழிக: ஒம்பா-போற்றாத, மேக-மேவுக, விரும்புக. மேற்கொள்க 861

2.அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

ஒருவன் தன்னைச் சூழ்ந்துள்ளவர் மீது அன்பில்லாதவனாகவும், வலிமை பொருந்திய துணையில்லாதவனாகவும்,