பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

திருக்குறள்



ஒருவனை மணந்து கொள்வதற்கு வேண்டிய எல்லா நலங்களும் குறைவறப் பெற்ற கன்னி ஒருத்தி எவரையும் மணந்து கொள்ளாமல், தன்னந் தனியாகவே இருந்து முதுமை அடைந்து வருந்துவதற்குச் சமம் ஆகும்.

அற்றார்-ஆதரவு அற்றவர், வறியவர்; ஒன்று-ஒரு சிறு பொருள்; ஆற்றாதான்-கொடுத்து உதவாதவன்; ஆற்றுதல்-(வேண்டுவன கொடுத்துத்) துன்பத்தைத் தணிவித்தல்; மிக நலம்-அளவுக்கு மீறிய நலம்; தமியள்-தனியாக இருப்பவள்; மூத்தற்று-முதுமை யுற்றாற் போலும். 1007

8.நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பிறரால் விரும்பப்படாத கருமி ஒருவன் செல்வம் பெற்றிருத்தல் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்திருத்தலுக்குச் சமம் ஆகும்.

நச்சு மரம் ஊருக்கு நடுவில் இருந்தாலும், அதன் பழத்தை எவரும் விரும்பார்; ஆதலால், அது யாருக்கும் பயன்படாது. அது போலப் பிறருக்கு உதவாத கருமியின் பணமும் ஒருவனுக்கும் பயன்படாமல் அழியும்.

நச்சுதல்-விரும்புதல்; நச்சுமரம்-விஷத்தன்மையுள்ள மரம்; பழுத்தற்று-பழங்களையுடையதாக இருத்தற்குச் சமம். 1008

9.அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பிறருடைய அன்பையும் இழந்து, தன்னையும் வருத்தி, அறம் புரியவும் எண்ணாமல் சேர்த்து வைத்த மிக்க செல்வத்தை அயலார் கொண்டு செல்வர்.

ஒரீஇ -நீத்து, விடுத்து; தற்செற்று-தன்னை வருத்திக் கொண்டு, (அஃதாவது உண்ணாமலும் உடுக்காமலும் வருத்திக் கொள்ளுதல்); அறம் நோக்காது-தருமம் புரிய எண்ணாமல்; ஒண்மை-மிகுதி. "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது முதுமொழி. 1009

10.சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

சிறந்த குணநலம் பொருந்திய செல்வர் சிறிது காலம் வறுமைப் பட்டிருந்தாலும் அந்தச் சிறிய காலம் எது