பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெஃகாமை

45


18. வெஃகாமை


1.நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

அறநெறி வழுவாது தொகுத்த நல்ல பொருளை நடு நிலைமை இல்லாமல் ஒருவன் அபகரிக்க விரும்பினால், அவனுடைய குடும்பம் அழிவதோடு, அவனுக்குத் தீங்கும் வந்து சேரும்.

நடு-நடு நிலைமை; நன் பொருள்-நியாய வழியாகத் தொகுத்த பொருள்; வெஃகின்-அடைய ஆசைப்பட்டால்; குடி- குடும்பம்; பொன்றி- அழிந்து. 171

2.படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

நடு நிலைமை அல்லாத செயலைச் செய்ய :நாணும் குணமுடையவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியைத் தரும் செயல்களைச் செய்ய மாட்டார்.

படுபயன்-பெறக்கூடிய நன்மை; பழிப்படுவ-பழியைத் தரத் தக்க செயல்கள்; நடுவன்மை - நடுநிலையற்ற தன்மை. 172

3.சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

அறநெறியால் அடையத் தக்க அழியாத இன்பத்தை விரும்புகின்றவர்கள், அழிந்து போகத் தக்க உலக இன்பத்திற்காக ஆசைப்பட்டு நியாயமில்லாதவற்றைச் செய்யமாட்டார்.

சிற்றின்பம்-(அழிந்து போகத் தக்க) சிறிய இன்பம், உலக இன்பம்; மற்றின்பம் - மற்றதாகிய அழியாத பேரின்பம். 173

4.இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி பெற்ற குற்றமற்ற அறிவினை உடையவர், தம்மிடத்தில் ஒரு பொருள் இல்லை