பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

திருக்குறள் நெறியைத் தமிழகம் முழுவதும் பரப்புவது மன்றத்தின் தலையாய குறிக்கோள். அக் குறிக்கோள் நிறைவேற மன்றம் பலவழிகளிலும் பாடுபட்டு வருகின்றது. அம் முயற்சிகளுள் ஒன்றாகவே திருக்குறள் இனிய எளிய உரை என்னும் இந்நூல் வெளிவருகின்றது.

தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் — சிறப்பாகத் தமிழிளைஞர் முன்னேற்றத்துக்கு மாகவே செலவிட்டுப் பல துறைகளிலும் உழைத்த உத்தமர். அப்பெரியார் திருக்குறளின் பொருளை அனைவரும் உணர்ந்து கற்றுப் பயன் பெறக்கூடிய வகையில் தெளிவான எளிய நடையில் இந்த உரை நூலை இயற்றி உதவினார்கள்.

மன்றத்திற்கு முழு உரிமையுடைய இந்நூல் இப்போது ஏழாம் பதிப்பாக வெளிவருகிறது. ஆறாம் பதிப்பைப் போலவே இந்நூலும் ஓரளவு சுருங்கிய பதிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வரிய இனிய நூலினை இயற்றியருளிய தமிழ்நெறிக் காவலர் மயிலை சிவமுத்து அவர்