பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருக்குறள் கீர்த்தியும் அடைவர்; அந்த ஆசார ஒழுக்கத்தை விட்டால் பொல்லாத பழியை அடைவர் என்றவாறு. 1ெ 138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பது ஒருவனுக்கு நல்ல ஆசாரம் நன்மைக்குக் காரணமாய் இருமை யினும் சுகத்தைக் கொடுக்கும்: பொல்லாத ஒழுக்கம் பாபத் துக்குக் காரணமாய் இருமையினும் துக்கத்தைக் கொடுக்கும் என்றவாறு. لٹے| 139. ஒழுக்கம் உடையவர்க் கொல்லாதே. திய வழுக்கியும் வாயாற் சொலல் என்பது ஆசார முடையவர்கள் மறந்தும் பொல்லாத வார்த்தை களை வாயாற் சொல்லுதல் இயலாது என்றவாறு. பொல்லாத வார்த்தைகளாவன, பிறருக்குத் தீங்குவரும் பொய் முதலாயினவும், தங்கள் குலத்திற்கு அடாதனவுமாம். க. 140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்பது பெரியோர்களோடு ஒக்க நடவாதவர்கள் பல நூல்களைக் கற்றாலும் அறிவில்லாதவர்கள் என்றவாறு. பெரியோர்களோடு ஒக்க நடக்கிறது, கொலை பொய் முதலானவற்றை விட்டுத் தர்மத்தின் வழியே நடக்கிறதாம். D ஆக அதிகாரம் யச; குறள் யசய 1. 'ஒல்லாவே' என்பது பிறர்பாடம்