பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I OU திருக்குறள் 144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் என்பது எத்தனை பெருமை யுடை யவ னானாலும் தன் குற்றத்தைச் சற்றும் எண்ணாமல் பிறனுடைய இல்லாளை விரும்புகிறவனுக்கு அவைகள் என்ன பயனைச் செய்யும்; ஒரு பலனு மில்லாமல் போய்விடும் என்றவாறு. பிறன் இல்லாளை விரும்புகிறவன் எல்லாப் பொருளையும் இழப்பன் என்பதாம். To 145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி என்பது பிறனுடைய பெண்சாதியைச் சேருகிறது எளிதென்று சேரு கிறவன், எக்காலத்திலேயும் கெடாத பழியையும் பகைமையையு மடைவனென்றவாறு டு 146. பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண் என்பது பிறனுடைய வில்லாளை வாஞ்சிக்கிறவனுக்குப் பகையும் பாவமும் பயமும் பழியுமென்று சொல்லப்பட்ட இந்த நாலும் அதிகமாகவுண்டா மென்பதாம். பகைபழிபாவம் பயங்களுண்டாகவே யிம்மை மறுமைப் பயனை யிழப்ப னென்பதாம் அ? 147. அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன் என்பது பிறனுடைய பெண் சாதி யழகை விரும்பாதவனே தர்மத் துடனே கூடி வாழ்கிற சம்சாரியென்பதாம். 1. நீங்காவாம் என்பது அச்சுநூல்