பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 103 154. நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் என்பது ஒருவன், நன்மை தன்னைவிட்டு நீங்காம லிருக்கவேணு மென்றால், பொறுமையை விடாமற்காக்க வேணு மென்றவாறு: பொறுத்தாலல்லது நன்மையில்லை யென்பதாம். ச 155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து என்பது ஒருவன் செய்த குற்றங்களைப் பொறாமல் திரும்ப அவனுக்குப் பொல்லாங்கு செய்கிற பேரைப் பெரியோர்கள் எண்ணார்கள்; பொறுத்த பேரைப் பொன்னைப் போலே பிரிய மாக வெண்ணி வைத்துக் கொள்வார்களென்றவாறு. டு 156. ஒறுத்தாற் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் என்பது தனக்குத் தீங்கு செய்தவனைத் தெண்டம் பண்ணின வனுக்கு அப்பொழுது மாத்திரமே சுகமுண்டாம்; அந்தக் குற்றங் களைப் பொறுத்தவர்களுக்கு உலக மழியு மளவுங் கீர்த்தி யுண்டா மென்றவாறு. .:יה 157. திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந் தறனல்ல செய்யாமை நன்று. என்பது ஒருவன் தனக்குச் செய்யத்தகாத பொல்லாங்குகளைச் செய்தாலும், அவனுக்கு வரப்போகிற குற்றத்துக்குத் தான் விசாரப்பட்டு அவனுக்குப் பொல்லாங்கு செய்யாமலிருக்கிறதே நன்றென்றவாறு. o Т H. -- - R ... = . . H it is ங் மையி, + - * * * I . வன்மையிலும் வன்மை' என்று படிக்க ந ைமையலும நனமை ான்றே அச்சு நூலிலுமுள்ளது. 1 - தண்டனை