பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.8 திருக்குறள் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளுகிறது தருமமல்ல என்றும் நீதியல்ல வென்றும் எண்ணாமல் எடுத்துக் கொண்டால், அஃது அவன் குடியைக் கெடச் செய்து அவனுக்கு வெகு குற்றங் களையும் தரும் என்றவாறு. து I 72. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் என்பது பிறர் பொருளை வேண்டிப் பொல்லாங்குகளைச் செய்யார், பகை பழி பாவங்களுக்கு அஞ்சுபவர் என்றவாறு 3D - 173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் என்பது பிறர் பொருளை அபகரித்துக் கொண்டதினாலே வருகிற நிலையில்லாத சுகத்தை விரும்பித் தருமம் அல்லாத பொல்லாத காரியங்களைச் செய்யார், மறுமைக்கு நிலையான சுகத்தை வேண்டுகிற பேர் என்றவாறு. /Һ_ 174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற புன்மையில் காட்சி யவர் என்பது நாம் தரித்திரரென்று நினைத்துப் பிறர் பொருள்களை விரும்பி எடுத்துக் கொள்ளார், ஐம்புலன்களையும் வென்று இரு பத்தைந்து குற்றமில்லாத சமயத் தரிசன முடையவர்கள் என்ற வாறு. تالي I 75. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் என்பது நுண்ணிதாக எல்லா நூல்களையும் கற்றதினால் உண்டா இய பரந்த அறிவு என்ன பயத்ததாம், எல்லார் மாட்டும் 1. அஞ்சுகிறபேர்-என்பது அச்சுநூல் 2. குறிப்பூரை காண்க.