பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I O 9 பொருளை விரும்பி அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வா ராயின் என்றவாறு. டு 176. அருள்வெ.கி யாற்றின்க ணரின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் என்பது அருளாகிற தருமத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்ல றத்தின் கண் நின்றவன், பிறன் பொருளை விரும்பி அதனைத் தான் கைக்கொள்ளத்தக்க பொல்லாங்குகளைச் செய்தால் அந்தத் தருமம் கெட்டுப்போ மென்றவாறு. இல்லறத்திலே இருந்து அறிவு முதிர்ந்தால் அல்லாமல் துறக்கப் படாதென்பதாம், EFF 177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் என்பது பிறர்பொருளை விரும்பிக்கொண்டு அதனால் வருகிற செல் வத்தை விரும்ப வேண்டாம்; பிறர் பொருளை விரும்பினால் பிறகு அனுபவிக்கிற துக்கம் வெகுவாக உண்டாகும் என்றவாறு. இT 178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் என்பது தன் ஐசுவரியம் குறைபடாமலிருக்க வேண்டு மென்றால் பிறனுடைய பொருள்களை விரும்பாமலிருக்க வேண்டும் என்ற வாறு. نالے | 179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்தாங்கே திரு என்பது -- அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாதவர்களை மகாலட்சுமி தான்வந்த சேருகிறதற்கு வழியறிந்து வந்துசேரும் என்றவாறு.