பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருக்குறள் மகாலட்சுமி சேருகிறது தருமமும் நீதியும் உள்ள விடத்து என்பதாம். சிரு 180. இறலினும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை என்னும் செருக்கு என்பது பின்வருகிற குற்றங்களையறியாமல் ஒருவன் பிறர் பொருளைக் கைக்கொள்ள நினைத்தால் அந்த நினைவு அவனுக்குக் கேடு தரும்; பிறர் பொருளை வேண்டாம லிருந்தால் செல்வத்தை யும் வெற்றியையும் கொடுக்கு மென்றவாறு. α) ஆக அதிகாரம் ய அக்குக்குறள் ளஅய (இப்பால்) 19. புறங்கூறாமை என்பது, பிறரைக் காணாதவிடத்திலே அவரை யிகழ்ந்து பேசாம லிருப்பது என்பதாம். 181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது என்பது ஒருவன் தருமங்களைச் செய்யாமல் பாவங்களைச் செய் தாலும், பிறரை இகழ்ந்து பேசான் என்று உலகத்தார் சொன்னால், அதுவே நல்லது என்றவாறு. புறங்கூறாதவன் பாவங்களால் அழிக்கப்படான் என்றவாறு. 5 182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை என்பது தரும மென்கிற தொன்றில்லை யென்று அழித்துச் சொல்லிப் பாவங்களைச் செய்கிறதைப் பார்க்கிலும் பொல்லாது. ஒருவனைக் காணாத விடத்திலே அழியப் பேசிக் கண்டவிடத் திலே அவனோடு பொய்யாக உறவாடுகிறது என்றவாறு. fo