பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 திருக்குறள் 187, பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் என்பது பகையான வார்த்தைகளைச் சொல்லிச் சுற்றத்தாரையும் விட்டுப் போகப் பண்ணுகிறவர், சந்தோஷமான வார்த்தை சொல்லித் தன்னோடு கூடி மகிழ்ந்தால், அவரை நம்ப வொண் ணாது என்றவாறு. புறங் கூறுவார்க்கு எல்லாரும் பகைவராவர் என்பது. ĽT 188. துன்னியார் குற்றமும் துற்று மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு என்பது தம்முடனே கூடிச் சினேகித ராயிருந்தவர் குற்றத்தைப் புறத்தியாருடனே சொல்லுகிறவர், பிறருடை குற்றத்தைச் சொல்லாதிரார் என்றவாறு. அவரால் ஒரு பயனும் இல்லை என்பதாம். لئے | 189. அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை என்பது பிறர் போனபிறகு அவர் குற்றங்களைச் சொல்லுகிறவனைப் பொறுக்கிறது, பூமிக்கு வெகுபாரம்; அவனைச் சுமக்கிறதே தனக்குத் தருமம் என்று பூமி சுமக்கின்றது என்றவாறு. பிறன் சொல்லுகிற குற்றங்களைப் பொறுத்தலே தன்ம மென்பதாம். அத 19). எதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ பன்னும் உயிர்க்கு என்பது பிறர் குற்றங்களைப் பார்த்துச் சொல்லுகிறது போலத் தம் முடைய குற்றத்தையும் பார்த்தா ராகின் அவருக்கு ஒரு பாவமும் வாராது என்ற வாறு,