பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருக்குறள் பிரயோஜன மில்லாதனவாய் நன்மையுமில்லாத வசனங் னங்களை ஒருவன் பலரிடத்திலேயும் சொன்னால் அவைகள் அவனுடைய நன்மைகளையும் நீதியையும் போக்கிவிடும் என்ற வாறு == அF 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை உடையார் சொலின் என்பது நல்ல பெரியோர்க ளானாலும் பிரயோஜன மில்லாத வார்த்தைகளைச் சொன்னால், அவர்களுடைய பெருமையும் நற் குணங்களும் அந்த வார்த்தைகளினாலே போய்விடும் என்ற வாறு. டு 19 6. பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல் என்பது பயனில்லாத வார்த்தைகளைப் பலகாலும் சொல்லுகிறவனை மனுஷனென்று சொல்லலாகாது; மனுஷருக்குள் பதர் என்று சொல்ல வேண்டும் என்றவாறு. நல்ல அறிவில்லாத படியினாலே பதர் என்று சொல்லப்படும். ്റ് 197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று என்பது பெரியவர்கள் நீதியில்லாத வசனங்களைச் சொன்னாலும், பயனில்லாத வார்த்தைகளைச் சொல்லாமலிருந்தால் அது நல்லது என்றவாறு. நன்மையில்லாத வசனங்களிலும் பிரயோஜனமில்லாத வசனம் பொல்லாதென்பதாம். a T 198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் என்பது